ஏஆர் ரஹ்மான் பாடிய சிம்பு படத்தோட 2வது சிங்கிள்.. எப்ப வெளியாகுது தெரியுமா?

சென்னை : நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு.

இந்தப் படம் அடுத்தமாதம் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் சிம்புவிற்கு ஜோடியாக சித்தி இத்னானி இணைந்துள்ளார். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

நடிகர் சிம்பு மற்றும் கௌதம் மேனன் இணைந்து சில படங்களில் வொர்க் செய்துள்ளனர். அச்சம் என்பது மடமையடா மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா என இந்தக் கூட்டணி இணைந்த படங்கள் ரசிகர்களை கட்டிப் போட்டன. தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.

செப்டம்பர் 15ல் ரிலீஸ்

செப்டம்பர் 15ல் ரிலீஸ்

இந்தப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகியுள்ளார் சித்தி இத்னானி. படத்தின் போஸ்டர்கள், டீசர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்

சிம்புவின் மாநாடு மற்றும் மஹா படங்கள் வெளியாகியுள்ளன. இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியான மாநாடு படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்துள்ளது. 100 கோடி கிளப்பிலும் இணைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் டைம் லூப் பாணியில் வெளியானது. இந்த வித்தியாசமான முயற்சிக்கு ரசிகர்கள் சிறப்பான ஆதரவை கொடுத்தனர்.

படத்தின் பிரமோஷன்கள்

படத்தின் பிரமோஷன்கள்

இதனிடையே ஹன்சிகாவுடன் சிம்பு நடித்திருந்த மஹா படமும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வெந்துத் தணிந்தது காடு படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படம் அடுத்தமாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களில் அடுத்ததாக படக்குழுவினர் ஈடுபட உள்ளனர்.

இரண்டாவது பாடல் அப்டேட்

இரண்டாவது பாடல் அப்டேட்

தற்போது பத்துத் தல சூட்டிங்கில் சிம்பு இணைந்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளது. இதனிடையே வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்து படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் வரும் 14ம் தேதி மாலை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Udhayanidhi |மனைவி கிருத்திகாவை கிண்டல் செய்த உதயநிதி | Paper Rocket Trailer | *Launch
ஏஆர் ரஹ்மான் பாடிய பாடல்

ஏஆர் ரஹ்மான் பாடிய பாடல்

பாடலை ஏஆர் ரஹ்மானே பாடியுள்ளாராம். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். முன்னதாக காலத்துக்கும் நீ வேணும் என்ற முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மறக்குமா நெஞ்சம் என்ற இரண்டாவது பாடலை நாளை மறுதினம் படக்குழு வெளியிட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X