பிரம்மாண்டமான வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா.. சூட்டிங்கிலிருந்து சென்னை திரும்பிய சிம்பு!
சென்னை : நடிகர் சிம்புவின் வித்தியாசமான நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது வெந்து தணிந்தது காடு படம்.
மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா இன்றை தினம் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக பத்து தல சூட்டிங்கிலிருந்து சென்னை திரும்பியுள்ளார் நடிகர் சிம்பு.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு மாநாடு, மஹா படங்களை தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தற்போது செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இசை -ட்ரெயிலர் வெளியீடு
இதையொட்டி படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் இன்றைய தினம் சென்னையில் நடைபெறவுள்ளது. பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யூனிவர்சிட்டியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் இருந்து சிம்பு ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

சென்னை திரும்பிய சிம்பு
குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் சிம்பு பேச்சை கேட்பதற்காகவே தாங்கள் வந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பத்து தல சூட்டிங்கில் இருந்த சிம்புவும் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் லான்ச்சில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளார். பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார்.

கமல்ஹாசன் பங்கேற்பு
இதையொட்டி இரு தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கமலை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் படத்தின் வெளியீட்டாளர் உதயநிதி, கௌதம் மேனன், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொள்ளவுள்ளனர். படக்குழுவினரும் பங்கேற்கவுள்ளனர்.

மாநாடு படம்
சிம்பு -வெங்கட் பிரபு கூட்டணியில் முன்னதாக வெளியான மாநாடு படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. 100 கோடி கிளப்பில் இணைந்து அவருக்கு மார்க்கெட் வேல்யூவையும் அதிகரித்துள்ளது.டைம் லூப் அடிப்படையில் வெளியான இந்தப் படத்தின் மேக்கிங் மிரட்டியது. சிம்புவின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அடுத்ததாக அவரது நடிப்பில் மஹா படம் வெளியான நிலையிலும் அந்தப்படம் கவனத்தை பெறவில்லை. இந்நிலையில் தற்போது வெளியாகவுள்ள வெந்து தணிந்தது காடு படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனும் முடுக்கி விடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











