கேரளாவிலும் பட்டையை கிளப்பும் வெந்து தணிந்தது காடு.. தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ் அறிவிப்பு

கொச்சி : நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் இன்றைய தினம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ள நிலையில், படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படத்திற்காக 20 வயது இளைஞனாக உடலை இளைத்து இருவேறு கெட்டப்பில் மிரட்டியுள்ளார் நடிகர் சிம்பு.

 நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்புவின் சிறப்பான நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு. இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்திய அளவில் பான் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாகியுள்ளது.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

முன்னதாக படத்திற்கான சிறப்பான ப்ரமோஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டது. படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் லிரிக் வீடியோ பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

சிம்புவின் முத்து கேரக்டர்

சிம்புவின் முத்து கேரக்டர்

படத்தில் முத்து என்ற கேரக்டரில் நடித்துள்ளார் சிம்பு. ட்ரெயிலர் போஸ்டர்கள், பாடல்கள் என அனைத்தையும் சிறப்பான கலவையாக படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் கொடுத்துள்ளார். இந்தப் படம் தற்போது சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் ஹாட்ரிக் வெற்றியாக மாறவுள்ளது.

கேரளாவில் சிறப்பான வரவேற்பு

கேரளாவில் சிறப்பான வரவேற்பு

படம் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் வெளியான நிலையில், தற்போது இந்த இடங்களில் படத்திற்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து கேரள விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஷிபு தமின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப் படுத்தியுள்ளார்.

வாய்ஸ் ஓவர் இல்லாத படம்

வாய்ஸ் ஓவர் இல்லாத படம்

கௌதம் மேனன் படங்களுக்கேயுரிய வாய்ஸ் ஓவர் போன்ற விஷயங்கள் இல்லாமல் இயல்பான கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ளது வெந்து தணிந்தது காடு படம். இந்தப் படத்தின் கதைக்களம் முந்தைய படம் போல இருக்காது என்றும் எதையும் எதிர்பார்க்காமல் வந்து படத்தை என்ஜாய் செய்யுமாறு முன்னதாக கௌதம் மேனன் கூறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X