சம்பளம் எதுவும் கேட்காமல்.. ரஜினிகாந்த் என்ற பெயருக்காகவே.. பாடலை பாடிய பிரபல நடிகர் !

சென்னை : கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடித்துவரும் பிரண்ட்ஸ்ஷிப் திரைப்படத்தில் வரும் சூப்பர் ஸ்டார் ஆந்தம் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். ரஜினிகாந்த் என்ற பெயருக்காகவே சம்பளம் பற்றி எதுவும் பேசாமல் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளாராம்.

Recommended Video

Oru Chance Kudu Making | Gautam Vasudev Menon, Shanthanu, Megha Akash

இப்படத்தில் ஹர்பஜன் சிங் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். இவர் ஒரு தீவிர ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ஆந்தம் என்ற பாடல் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த பாடலுக்கு சிம்புவின் குரல் கனகச்சிதமாக பொருந்தி பாட்டை மேலும் ஹிட்டாகி உள்ளது.

தமிழில் பதிவிட்டும்

தமிழில் பதிவிட்டும்

தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரச்சனை நடந்தாலும் முதல் ஆளாக வட இந்தியாவிலிருந்து தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தமிழில் பதிவிட்டும் தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பாராட்டுகளையும் அதேசமயம் எதிர்மறையான நிகழ்வுகளுக்கு தனது எதிர்ப்பையும் தொடர்ந்து காட்டி வரும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தற்போது நேரடி தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

ஹர்பஜன் பிறந்தநாளன்று

ஹர்பஜன் பிறந்தநாளன்று

பிரண்ட்ஷிப் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஆக்சன் கிங் அர்ஜுன், பிக் பாஸ் லாஸ்லியா மற்றும் காமெடி நடிகர் சதீஷ் போன்றோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கான அப்டேட் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளன்று சூப்பர் ஸ்டார் ஆன்ந்தம் என்ற பாடல் பிரண்ட்ஷிப் படத்திலிருந்து வெளியிடப்பட்டது.

சூப்பர்ஸ்டார் ஆந்தம்

சூப்பர்ஸ்டார் ஆந்தம்

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் கூடி வரும் நிலையில் இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியிருப்பதால் மேலும் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளன்று இந்த "சூப்பர்ஸ்டார் ஆந்தம்" பாடல் சிம்புவின் குரலில் பாடப்பட்டு வெளியாகி இணையதளத்தைத் தெறிக்க விட்டது.

தீவிர ரசிகனால்

தீவிர ரசிகனால்

என் மாருமேல, என் நரம்புக்குள்ள, சூப்பர் ஸ்டார் என உடம்பில் இருக்கும் நரம்பு, இரத்தம், சதை என அனைத்திலும் ரஜினி வெறி ஊறிப்போன தீவிர ரசிகனால் எழுதப்பட்ட இந்த சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடலின் பாடல் வரிகள் செம்ம மாஸாக இருக்கும் நிலையில் இந்த பாடலை சிம்பு பாடியதால் மேலும் கர்ஜித்தது.

சம்பளம் கேட்காமல்

சம்பளம் கேட்காமல்

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் மனோபாலாவின் பேட்டி ஒன்றில் பேசிய பிரபல நடிகர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ஆந்தம் பாட பிரண்ட்ஷிப் படக்குழு சிம்புவை அணுகியபோது சம்பளம் மற்றும் இதர தகவல்கள் பற்றி எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயருக்காக உடனடியாக வந்து இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தார் என அந்த பேட்டியில் சிம்புவை பற்றி நெகிழ்ந்து அந்த நடிகர் கூறியிருந்தார். எனினும் சிம்பு எந்த ஒரு சம்பளமும் கேட்காத போதும் படக்குழு அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துள்ளது

ரஜினியின் தீவிர ரசிகர்

ரஜினியின் தீவிர ரசிகர்

சூப்பர் ஸ்டாருக்கு உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் ரசிகர்களாக இருக்கும் நிலையில் நடிகர் சிம்புவும் ரஜினியின் மிகத் தீவிர ரசிகர் என்ற முறையில் இந்த சூப்பர் ஸ்டார் ஆந்தம் பாடலை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து பாடி கொடுத்தது பலரையும் பாராட்ட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X