டிசம்பரில் பெரிய அறிவிப்பா? அதுவா இருக்குமோ.. சிம்புவின் ஒத்த வார்த்தை.. தூக்கத்தை தொலைத்த ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் சிம்பு சொன்ன ஒத்த வார்த்தையால் தூக்கத்தை தொலைத்துள்ளனர் அவரது ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் மல்ட்டி டேலன்ட்டட் நடிகராக வலம் வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிம்பு.
நடிப்பு மட்டுமின்றி, எழுத்து, இயக்கம், வசனம், நடனம், பாடல், இசை என அப்பாவுக்கு தப்பாத மகனாக உள்ளார் சிம்பு.

கைகூடவில்லை
37 வயதை கடந்த சிம்புவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. சினிமா இன்டஸ்ட்ரியில் சிம்பு வயதை ஒத்த நடிகர்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகி தோலுக்கு உயர்ந்த பிள்ளைகளே உள்ளனர். ஆனால் சிம்புவுக்கு இன்னும் திருமணம் கை கூடவில்லை.

ஹன்சிகாவுடன் காதல்
நடிகர் சிம்பு ஏற்கனவே நடிகை நயன்தாராவை காதலித்தார். இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்த நிலையில் திடீரென மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பிறகு நடிகர் சிம்பு நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் காதல் உறவில் இருந்தார்.

சிங்கிளாக இருக்கும் சிம்பு
ஆனால் அந்த காதலும் நீடிக்கவில்லை. அம்மாப் பேச்சை கேட்டு சிம்புவுடனான காதலை முறித்துக் கொண்டார் ஹன்சிகா. அதன் பிறகு சில நடிகைகளுடன் கிசு கிசுக்கள் வந்தே போதும் சீரியஸாக ஒன்றும் இல்லை. சிங்கிளாகவே இருந்து வருகிறார் சிம்பு.

பேட்டிகளில் கவலை
சிம்புவின் தம்பி, தங்கைக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டது. ஆனால் சிம்புவுக்கு மட்டும் இன்னமும் ஒரு வழி பிறக்கவில்லை. சிம்புவுக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பது அவரது பெற்றோருக்கு பெரும் கவலையாக உள்ளது. ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டிகளிலும் அவர்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தயாரிப்பாளர் தகவல்
தற்போது நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியான நிலையில் அதனை படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி மறுத்தார். பொய்யான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

பெரிய அறிவிப்பு
இருந்த போதும் இதுதொடர்பான பேச்சு அடங்கவில்லை. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சிம்பு, மாநாடு படம் கைவிடப்படவில்லை என்றார். மேலும் வரும் டிசம்பர் மாதம் பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

கல்யாணமா?
இதனைக் கேட்ட சிம்புவின் ரசிகர்கள், அது என்ன அறிவிப்பாக இருக்கும் என தூக்கத்தை தொலைத்து யோசித்து வருகின்றனர். அது கல்யாண அறிவிப்பாய் இருக்குமோ அல்லது சிவப்பு ரோஜாக்கள் 2 படத்தின் அறிவிப்பாய் இருக்குமோ என்றும் கேட்டு வருகின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம்
அது என்ன அறிவிப்பு என்ன என தெரிந்து கொள்ள, வரும் டிசம்பர் மாதம் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. அதற்குள் என்ன அறிவிப்பு என்பது சமூக வலைதளங்களில் கசிந்தாலும் கசியலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன அறிவிப்பு என்று!


Click it and Unblock the Notifications











