twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எதை செஞ்சாலும் குறை சொல்லிட்டே இருக்காங்க.. முதல்ல மனசை சுத்தம் பண்ணுங்க.. 'ஈஸ்வரன்' சிம்பு பேச்சு!

    By
    |

    சென்னை: போட்டி, பொறாமைதான் இங்கு அதிகமாக இருக்கிறது என்றும் மற்றவர்களுக்கு அட்வைஸ் பண்ணுவதை நிறுத்துங்கள் என்றும் நடிகர் சிலம்பரசன் கூறியுள்ளார்.

    சுசீந்திரன் இயக்கியுள்ள படம், ஈஸ்வரன். சிலம்பரசன் டிஆர் ஹீரோவாக நடித்துள்ளார்.

    நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா, காளிவெங்கட், முனீஷ்காந்த், பால சரவணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

    ஆரம்பமானது ஈஸ்வரன் ஆடியோ லாஞ்ச்.. ரசிகர்கள் சூழ.. வேட்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு!ஆரம்பமானது ஈஸ்வரன் ஆடியோ லாஞ்ச்.. ரசிகர்கள் சூழ.. வேட்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு!

    பாடல் வெளியீடு

    பாடல் வெளியீடு

    தமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள தமிழன் பாட்டு ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இதன் பாடல் வெளியிட்டு விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் இன்று நடந்தது.

    வேட்டி சட்டை

    வேட்டி சட்டை

    இதில், நடிகர் சிம்பு, இயக்குனர் சுசீந்திரன், நடிகைகள் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, முனீஷ்காந்த், பாலசரவணன், காளிவெங்கட் உட்பட படத்தில் பங்கேற்றவர்கள் கலந்து கொண்டனர். ரசிகர்களுக்காக நடத்தப்பட்ட இந்த பாடல் வெளியீட்டு விழாவில், வேட்டி சட்டையில் வந்திருந்தார் நடிகர் சிம்பு. அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

    ஜூமில் சொன்ன கதை

    ஜூமில் சொன்ன கதை

    விழாவில் சிம்பு பேசியதாவது: இத்தனை நாள், நான் எப்படி இருந்தேன். இப்படி எப்படி மாறினேன்? இந்தப் படம் எப்படி நடந்தது? எல்லாமே எனக்கும் தெரியலை. திடீர்னு ஒரு நாள் இயக்குனர் சுசீந்திரன் பேசினார். அவர்கிட்ட ஏற்கனவே படம் பண்ணலாம்னு பேசினோம். அவர் ஜூம்ல கதை சொன்னார்.

    தன்னம்பிக்கை

    தன்னம்பிக்கை

    இந்த கொரோனா நேரத்துல ஏகப்பட்ட பேர் மன உளைச்சல்ல இருந்தோம். அந்த நேரத்துல இந்தக் கதையை கேட்டதும் எனக்கு தன்னம்பிக்கை வந்தது. இந்தப் படம் வந்தா நிறைய பேருக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்னு நினைச்சேன். அதனால உடனே ஓகேன்னு சொன்னேன்.

    போட்டி, பொறாமை

    போட்டி, பொறாமை

    இங்க சில பேரு எவன் எதைச் செஞ்சாலும் குறை சொல்லிட்டே இருக்காங்க. போட்டி, பொறாமைதான் இருக்கு. முதல்ல அட்வைஸ் பண்றதை நிறுத்தணும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை இருக்கு. சோசியல் மீடியாவுல அவன் சொல்றான், இவன் சொல்றான்னா கேட்காதீங்க. வெளிய எதுவுமே இல்லை. மனசை சுத்தம் பண்ணுங்க.

    அவங்க விருப்பம்

    அவங்க விருப்பம்

    நான் ஒரு கட்டத்துல, சரியில்லாததுக்கு காரணம் இங்க (மனசு) சரியில்லாததுதான். போட்டி பொறாமை வேண்டாம். எல்லாரும் தியேட்டருக்கு வந்து படம் பாருங்க. தியேட்டருக் காகத்தான் படம் எடுக்கிறோம். சில பேர் வேற தளங்கள்ல படத்தை வெளியிடறாங்கன்னா, அது அவங்க விருப்பம்.

    ரொம்ப ஸ்பீடா

    ரொம்ப ஸ்பீடா

    நம்ம அரசு, தியேட்டர்ல நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிக்க இருக்கிறதா சொல்லி இருக்காங்க. அரசுக்கு நன்றி. இந்தப் படத்துல சுசீந்திரன் கூட பணியாற்றியது மகிழ்ச்சியா இருந்தது. ரொம்ப ஸ்பீடா இந்தப் படத்தை எடுத்திருக்கார். அவருக்கு நன்றி.

    அன்பை வெளிப்படுத்துங்க

    அன்பை வெளிப்படுத்துங்க

    அவன் வாழ்க்கையை அழிக்கணும் இவன் வாழ்க்கையை அழிக்கணும்னு பிளான் பண்ணாதீங்க. மேல இருக்கிறவன் வேற பிளான் வச்சிருக்கான். அவர் சிரிச்சிடுவான். இனி பேச ஒண்ணுமே இல்லை. செயல் மட்டும்தான். அன்பை வெளிப்படுத்துங்க. அடுத்து மாநாடு, பத்து தல, இன்னும் மூணு படங்கள் இருக்கு.

    English summary
    Silambarasan's Easwaran audio has been released today. Speaking at the function, actor Simbu said, 'Dont advice others'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X