சிம்பு சொல்லபோகும் குட் நியூஸ்! பிரியாணி விருந்து வைத்து அசத்தியது அதுக்குதான் - ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: கோமாளி மற்றும் லவ் டுடே படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தற்போது பிஸியான நடிகராகவே மாறிவிட்டார். இவர் ஏற்கனவே இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்.ஐ.சி படத்தில் நடித்து வரும் நிலையில், ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் நடித்து வருகின்றார்.
டிராகன் படம்: படத்தின் முதற்கட்ட படபிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்கவுள்ளது. இது சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தினை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் தயாரித்து வருகின்றது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு வந்தவுடன், கோலிவுட் வட்டாரத்தில் இந்த படத்தின் கதை முதலில் சிம்புவுக்கு சொல்லப்பட்டது. அதன் பின்னர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்திற்குள் வந்துள்ளார் என பேச்சுகள் எழுந்தது. ஆனால் இதனை முற்றிலும் மறுத்த டிராகன் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, "நான் சிம்பு சாருக்குச் சென்ன கதை வேறு. டிராகன் படத்தின் கதை முழுக்க முழுக்க சென்னையை மைய்யப்படுத்தி பிரதீப் ரங்கநாதனை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை" எனக் கூறி மறுத்துவிட்டார்.

அஸ்வத் மாரிமுத்துவின் பிறந்தநாள்: இந்நிலையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இன்று அதாவது ஜூன் 6ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இந்நிலையில் நடிகர் சிம்பு, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் அவரது உதவியாளர்களுக்கு பிரியாணி அனுப்பு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதனை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தனது உதவியாளர்களுடன் பிரியாணி சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து, எனது பிறந்த நாளுக்கு, எனக்கும் எனது குழுவினருக்கும் நீங்கள் பிரியாணி அனுப்பியதற்காக நன்றிகள் சிம்பு சார். நீங்க ரொம்ப நல்ல மனிதர்" என பதிவிட்டுள்ளார்.

அஸ்வத் மாரிமுத்துவின் இந்த பதிவிற்கு சிம்பு ரசிகர்கள் லைக்குகளை தட்டிவிட்டு வருகின்றனர். இதன்மூலம் அஸ்வத் மாரிமுத்து தற்போது இயக்கி வரும் டிராகன் படத்திற்குப் பின்னர் சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் புகைச்சல் கிளம்பியுள்ளது.

டிராகன் படத்தில் மிஷ்கின்: டிராகன் படத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கின்றார் என்ற தகவலை படக்குழு நேற்று பகிர்ந்தது. ஏற்கனவே மிஷ்கின், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், லியோ, மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார். மிஷ்கினை ஒருபக்கம் நடிகராக கலக்கி வந்தாலும், அவர் மீண்டும் இயக்குநராக வேண்டும் என்பது அவரது இயக்கத்தில் வெளியான படங்களின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளாகவே உள்ளது. இவரது இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு சைக்கோ திரைப்படம் வெளியானது. இப்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். இதற்கிடையே டிராகன் படத்தில் மிஷ்கின் கமிட்டானதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











