சிம்புவை அழவைத்த டைரக்டர் வெங்கட் பிரபு... உருக்கத்துடன் நன்றி சொன்ன சிம்பு

சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Recommended Video

குடியை விட்ட சிம்பு.. தம்பியை களமிறக்கும் ராகவா லாரன்ஸ்.. கலக்கல் டாப் 5 பீட்ஸ்!

இந்த படத்தின் சிறப்புகள் குறித்து சமீபத்தில் படக்குழுவினர் ட்விட்டரில் இணைந்து கலந்துரையாடினர்.

இந்நிலையில் மன்மதன் படத்திற்கு பிறகு மாநாடு படத்தின் ஒரு காட்சியில் தான் தொடர்ந்து அழுததாக சிம்பு தெரிவித்துள்ளார்.

மாநாடு படம்

மாநாடு படம்

நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கருணாகரன், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது மாநாடு படம். வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த பாடல்

ரசிகர்களை கவர்ந்த பாடல்

கொரோனா தாக்கத்தால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக பாடலில் டீசரும் வெளியிடப்பட்டது.

ரசிகர்களை கவர்ந்த சிம்பு ஆட்டம்

ரசிகர்களை கவர்ந்த சிம்பு ஆட்டம்

யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரிணி இந்த பாடலை பாடியிருந்தனர். திருமண கொண்டாட்டத்தை பின்புலமாக கொண்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு ஆட்டம் போட்டுள்ளார். அவரது நடனமும் அனைவரையும் கவர்ந்தது.

அழ வைத்த காட்சி

அழ வைத்த காட்சி

வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் குழுவினர் இணைந்து ட்விட்டரில் கலந்துரையாடினர். இந்த படத்தில் நீண்ட நாட்கள் கழித்து நீளமான ஒரு காட்சியில் நடித்ததாகவும் அப்போது மன்மதனில் மொட்டை மதன் அழும் காட்சி நினைவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபுவிற்கு நன்றி

வெங்கட் பிரபுவிற்கு நன்றி

அந்த காட்சி சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டதாகவும், காட்சி முடிந்தும் தான் தொடர்ந்து அழுததாகவும் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்த காட்சிக்காக இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில் எஸ்ஜே சூர்யா, வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X