சர்வதேச இசை தினக் கொண்டாட்டம்... லிரிக் வீடியோ வெளியிட்ட மாநாடு நாயகன் சிம்பு
சென்னை : மாநாடு படத்தின் லிரிக் வீடியோ பாடலை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச இசை தினத்தையொட்டி இந்த பாடலை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இசையை கொண்டாடுமாறும் அன்பை பரப்புமாறும் அவர் தனது கேப்ஷனில் கேட்டுக் கொண்டுள்ளார்.

படத்தின் சிங்கிள் வெளியீடு
நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் மாநாடு. இந்த படத்தின் ட்ரெயிலர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது.
லிரிக் வீடியோ வெளியீடு
இன்றைய தினம் சர்வதேச இசை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்த லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மெஹரசைலா என்று துவங்கும் அந்த பாடல் திருமண நிகழ்வையொட்டி எடுக்கப்பட்டுள்ளது.

யுவன் பாடல்
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், அவரும் பவதாரிணியும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். மதன் கார்க்கி வரிகளில் பாடல் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாடலை வெளியிட்டுள்ள சிம்பு, இசையை கொண்டாடுமாறும் அன்பை பரப்புமாறும் கோரியுள்ளார்.

அதிகமான எதிர்பார்ப்பு
மேலும் இந்த பாடலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் ஷேர் செய்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











