கட்டிப்பிடித்து ஸ்ட்ராங்கா முத்தம் கொடுக்கும் சிம்பு.. யாருக்குன்னு பாருங்க.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: நடிகர் சிம்பு தனது தங்கை மகனை கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Silambarasan receiving birthday gift from Mappillai | சிம்புக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கை மகன்

நடிகர் சிம்பு நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் ஈஸ்வரன் படம் வெளியானது. இந்தப் படத்திற்காக பெருமளவு எடையை குறைத்து பழைய சிம்புவாக மாறியுள்ளார்.

தொடர்ந்து மாநாடு படத்திலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பத்து தல என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார் சிம்பு.

அடிக்கடி போட்டோக்கள்

அடிக்கடி போட்டோக்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை சிம்பு தொடங்கினார். இதையடுத்து இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

எங்க அம்மா ஊட்டிவிடுறாங்க

எங்க அம்மா ஊட்டிவிடுறாங்க

மேலும் தனது தங்கை மகனுடன் இருக்கும் வீடியோவையும் பகிர்ந்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உங்க அம்மா உனக்கு ஊட்டி விடுறாங்க.. எங்க அம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க என தனது தங்கை மகனுடனும் அம்மாவுடனும் இருந்த வீடியோவை பகிர்ந்தார்.

கட்டிப்பிடித்து முத்தம்

இந்நிலையில் தனது தங்கை மகனை கொஞ்சும் மற்றொரு வீடியோவை ஷேர் செய்துள்ளார் சிம்பு. அதில் சிம்புவின் தங்கை மகன் அவருக்கு ஒரு கிஃப்ட் பேக்கை கொடுக்கிறார். அதனை பெற்றுக்கொள்ளும் சிம்பு, தனது தங்கை மகனை கட்டியணைத்து முத்தம் கொடுக்கிறார்.

நான்கரை லட்சம் லைக்ஸ்

நான்கரை லட்சம் லைக்ஸ்

இந்த வீடியோவை சிம்புவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை நான்கரை லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். மேலும் பலர் க்யூட், தலைவா மாஸ் என புகழ்ந்து வருகின்றனர்.

சிம்பு பிறந்தநாள்

சிம்பு பிறந்தநாள்

நடிகர் சிம்பு கடந்த 3 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால் பிறந்தநாளின் போது தான் ஊரில் இல்லை என்பதால் ரசிகர்கள் யாரும் வீட்டிற்கு வரவேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: simbu சிம்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X