அவசரமாக பயணித்து விட்டார் இறைவனிடம்… சிம்புவின் உருக்கமான பதிவு !

சென்னை : தொடர்ச்சியான மரணம் மனவேதனையை அளிக்கிறது என்று நடிகர் சிம்பு உருக்கமாக கூறியுள்ளார்.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கேவி ஆனந்த், கடந்த கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த 24ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தேசிய விருது

தேசிய விருது

தென்மாவின் கொம்பத்து என்ற மலையாள படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் கேவி ஆனந்த். முதல் படத்திலேயே அவருக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர் முதல்வன், சிவாஜி உள்ளிட்ட பல முன்னணி திரைப்படங்களிலும் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

இரங்கல்

கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கேவி ஆனந்ர், கோ, அயன், மாற்றான், அனேகன், கவண் , காப்பான், என பலத் திரைப்படங்களை இயக்கி உள்ளார். இவரது இழப்பு தமிழ் திரைத்துறைக்கு பேரிழப்பு கமல் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவு செய்தி அதிர்ச்சியும் வேதனையையும் அடையச் செய்துள்ளதாக கூறியுள்ளார். இதேபோல திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றன.

அதிர்ச்சி அளிக்கிறது

அதிர்ச்சி அளிக்கிறது

நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அதிர்ந்துக்கூட பேசதாத நல்ல மனிதர் கேவிஆனந்த் அவர்கள், கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழ்நிலை தவிர்க்கும் படியாகிவிட்டது.

மனம் நம்ப மறுக்கிறது

மனம் நம்ப மறுக்கிறது

மனம் நம்ப மறுக்கிறது, பொய் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. அவசரமாக பயணித்து விட்டார் இறைவனிடம், திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என சிம்பு அந்த பதிவில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X