பட்டையை கிளப்பும் எஃப்ஐஆர் படத்தின் தீம் பாடல்... தெறிக்க விட்ட சிம்பு
சென்னை : நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப்ஐஆர்.
Recommended Video
இந்தப் படம் வரும் 11ம் தேதி தமிழ், தெலுங்கில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
ராட்சசன் படத்தின் வசூல் வெற்றியை இந்தப் படம் ரிலீசுக்கு முன்னதாகவே பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ராட்சசன் படம்
நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் பல படங்கள் வந்திருந்தாலும் அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்த படம் ராட்சசன். கடந்த 2018ல் வெளியான இந்தப் படம் ராம்குமார் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் வெளியானது. மிரட்டலான திரைக்கதையுடன் இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்தது.

கேரியர் பெஸ்ட் படம்
இந்தப் படத்தின் தீம் இசை மிரட்டலாக அமைந்திருந்தது.விஷ்ணு விஷாலின் கேரியர் பெஸ்ட் படமாகவும் இந்தப் படம் அமைந்திருந்தது. இதையடுத்து ஹாலிவுட் ரீமேக் உள்ளிட்ட பல சிறப்புகளையும் பெற்ற இந்தப் படத்தையடுத்து விஷ்ணு விஷால் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எஃப்ஐஆர் படம்
இந்நிலையில் இவர் தற்போது தனது தயாரிப்பு மற்றும் நடிப்பில் எஃப்ஐஆர் என்ற படத்தை உருவாக்கியுள்ளார். கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் வரும் 11ம் தேதி தமிழ், தெலுங்கில் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கில் ரிலீஸ்
ராட்சசன் படம் தெலுங்கிலும் விஷ்ணு விஷாலுக்கு மார்க்கெட்டை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்தப் படம் ஒரே நேரத்தில் ஆந்திரா, தெலங்கானாவில் வெளியாக உள்ளது. தமிழில் இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளது.

வசூல் வேட்டை
இந்நிலையில் ரிலீசுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் வசூல் ராட்சசனை தூக்கி சாப்பிட்டு உள்ளது. ராட்சசன் படம் தமிழகத்தில் 18 கோடி ரூபாய் வசூலை கொடுத்திருந்த நிலையில், தற்போதே எஃப்ஐஆர் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அந்த வசூலை தாண்டியுள்ளது.

தனுஷ், உதயநிதி பாராட்டு
முன்னதாக படத்தை பார்த்த நடிகர் தனுஷ் மற்றும் உதயநிதி ஆகியோர் படத்தை வெகுவாக புகழ்ந்து, விஷ்ணு விஷாலுக்கும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்நிலையில் எஃப்ஐஆர் படத்தின் தீம் பாடலை தற்போது சிம்பு பாடியுள்ளதும் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

சிம்பு பாடிய தீம் பாடல்
அஷ்வத் இசையில் இந்தப் பாடலை கருணாகரன் எழுதியுள்ளார். இந்நிலையில் சிம்புவுடன் இணைந்து ஆங்கில ராப்பை கிறிஸ்டோபர் ஸ்டான்லி பாடியுள்ளார். தமிழில் மாபினும் இணைந்துள்ளார். படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ள நிலையில், படத்தில் கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா, ரெபா மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

சிம்பு மகிழ்ச்சி
இந்நிலையில் இந்தப் பாடலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சிம்பு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த எனர்ஜியான பாடலை பாடியது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











