சிம்புவும் ராதிகாவும் மிகவும் எதார்த்தமான தோற்றத்தில்....வெந்து தணிந்தது காடு குடும்ப பின்னணி என்ன ?

சென்னை: நடிகர் சிம்புவுக்கு மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது

இப்பொழுது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார்

முற்றிலும் வித்தியாசமான கதையை களத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் ராயல் என்ஃபீல்டு மீது உட்கார்ந்து கொண்டு சிம்பு போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வைரலாகி வந்ததது குறிப்பிட தக்கது .

 பிளாக்பஸ்டர் வெற்றி

பிளாக்பஸ்டர் வெற்றி

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று திரையரங்குகளை தெறிக்க விட்டது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாநாடு சக்கை போடு போட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மாநாடு வெற்றியை தொடர்ந்து சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்த சிம்பு கெளதம் வாசுதேவ் மேனன் காம்போ மீண்டும் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் இணைந்தது. இருவரும் இணைந்து பணியாற்றிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

 சக்சஸ் காம்போ

சக்சஸ் காம்போ

பின் விண்ணைத்தாண்டி வருவாயா பாகம் 2ல் கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா 2 இப்போதைக்கு உருவாக சாத்தியம் இல்லை என்று சொல்லி வந்த நிலையில் , இந்த சக்சஸ் காம்போ வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

 ஆக்ஷன் த்ரில்லர்

ஆக்ஷன் த்ரில்லர்

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என டைட்டில் வைக்கப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில் படத்தின் டைட்டிலை வெந்து தணிந்தது காடு என படக்குழு மாற்றி அறிவித்தது . பாரதியின் பிரபலமான பாடல் வரிகளில் இருந்து வைக்கப்பட்டுள்ள வெந்து தணிந்தது காடு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது

 ஆக்ஷன் த்ரில்லர்

ஆக்ஷன் த்ரில்லர்

மேலும் இந்த படத்தில் சிம்பு உடல் எடையை தாறுமாறாக குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் காதல் படங்களாக இயக்கிய கௌதம் மேனன் இப்பொழுது வெந்து தணிந்தது காடு படத்தை ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக இயக்கி வருகிறார்.

 ராயல் என்ஃபீல்ட் மீது ராயலாக

ராயல் என்ஃபீல்ட் மீது ராயலாக

காயடு லோஹர் மற்றும் சித்தி இதானி என இரண்டு ஹீரோயின்களில் இதில் நடித்து வருகின்றனர். ராதிகா சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு ராயல் என்ஃபீல்ட் மீது ராயலாக உட்கார்ந்தவாறு செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 சிம்பு ராதிகா

சிம்பு ராதிகா

அப்பா இல்லாத ஒரு குடும்பத்தில் அம்மா தான் எல்லாமுமாக இருப்பார்கள். அப்படி ஒரு குடும்ப தாயாக ராதிகா நடித்து உள்ளார் என்று சொல்ல பட்டு வருகிறது. அன்பான ஒரு அன்னன் தங்கை மற்றும் அந்த இரண்டு பேருக்கும் பாசமான ஒரு தாயாக ராதிகா நடித்து உள்ளார் என்று இணையத்தில் வந்த போட்டோஸ் கூறி வருகிறது. சிம்பு மற்றும் ராதிகா இருவரும் மிகவும் எதார்த்தமான கதாபாத்திரங்களை மிக நேர்த்தியாக செய்ய கூடியவர்கள். ஒரு மிடில் கிளாஸ் குடும்ப பின்னணியில் உணர்ச்சிபூர்வமான பல வசனங்கள் இந்த படத்தில் இருக்கிறது என்றும் சொல்ல பட்டு வருகிறது. விரைவில் வெந்து தணிந்தது காடு படம் பற்றி பல அப்டேட்ஸ் வர இருக்கிறது . சிம்பு ஜோதிகா நடித்த மன்மதன் படம் வேற லெவல் காதல் ஹிட் ஆனது .சிம்பு ராதிகா நடித்த இந்த படம் மிகவும் அற்புதமான தாய் பாசத்தில் ஹிட் ஆகும் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X