என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன்: சிம்பு
படப்பிடிப்பிற்கு காலதாமதம் இல்லாமல் சென்று வருவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: தனது வாழ்க்கையை தனது விருப்பப்படி வாழ நினைப்பதாகவும், படப்பிடிப்பிற்கு காலதாமதம் இல்லாமல் சென்று வருவதாகவும் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியுள்ள படம் எழுமின் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. நடிகர்கள் சிம்பு, விஷால், கார்த்தி, விவேக், உதயா, நடிகை தேவயானி, இயக்குனர் விஜி உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
டிரெய்லரை வெளியிட்ட சிம்பு விழா மேடையில் பேசியதாவது:

3 படங்கள்:
ரசிகர்களுக்காக வருடத்துக்கு மூன்று படங்களாவது பண்ண வேண்டும் என்று அனைவரும் அறிவுரை கூறுகிறார்கள். எனக்கும் அது தெரியும். ஆனால் என் விருப்பப்படி வருடத்துக்கு ஒரு படம் கொடுத்தாலே போதும் என நினைக்கிறேன்.

மாறி விட்டேன்:
நான் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன். யாருக்காகவும் என் சந்தோஷத்தையும் இழக்க மாட்டேன். இருப்பது ஒரு வாழ்க்கை. அதை என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன். இனி நான் படப்பிடிப்புக்கு லேட்டாக வர மாட்டேன். இப்போதும் லேட்டாக போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என இவ்வாறு நடிகர் சிம்பு தெரிவித்தார்.

அடிக்கல் நாட்டுவிழா:
நடிகர் சங்கத் தேர்தலின் போது விஷாலை நான் கடுமையாக விமர்சித்தேன். ஆனால் அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவுக்கு என்னை அவர் அழைத்தார். நானும் சென்றேன். எப்போதும் எல்லோரும் தவறு செய்வார்கள் என்பதில்லை. என் மனதில் பட்டதை நான் பேசுகிறேன்.

6 சிறுவர்கள்:
நடிகர் விவேக், நடிகை தேவயானி உள்ளிட்டோர் ஆறு சிறுவர்களுடன் சேர்ந்து நடித்துள்ள இந்தப் படம், தற்காப்புக் கலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











