நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.. இந்தியன் 2 விபத்து.. சிம்பு உருக்கம்!

Recommended Video

STR Latest Emotional Video | Maanadu | Simbhu | Simbhu Fans

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் மரணமடைந்த நிலையில் நடிகர் சிம்பு உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்,

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நசரத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை இரவு, ஷுட்டிங்கிற்காக லைட்டுகள் கட்டப்பட்டிருந்த கிரேன் அறுந்து விழுந்தது.

மூன்று பேர் பலி

மூன்று பேர் பலி

இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, புரெடெக்ஷன் உதவியாளர் மது, கலை உதவி இயக்குநர் சந்திரன் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக கிரேன் உரிமையாளர், கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிம்பு உருக்கம்

சிம்பு உருக்கம்

இதேபோல் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பவும் நசரத்பேட்டை போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து நடிகர் சிம்பு உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,

ஏணியாகப் பார்க்கிறேன்

ஏணியாகப் பார்க்கிறேன்

எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர்தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப் படுகிறது.

நினைக்க நினைக்க..

நினைக்க நினைக்க..

அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். இந்தியன் -2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.

ஆண்டவன் துணை

ஆண்டவன் துணை

இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும்.

ஈடுசெய்ய முடியாது

ஈடுசெய்ய முடியாது

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும். பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X