ரசிகையின் உருக வைக்கும் கடிதத்தை பார்த்து கண்கலங்கிய சிம்பு.. தீயாய் பரவும் போஸ்ட்!
சென்னை: தனது ரசிகை ஒருவரின் கடிதத்தை பார்த்து நடிகர் சிம்பு கண் கலங்கிய சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு கடந்த 22ஆம் தேதி காலை அசத்தல் வீடியோவுடன் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் இணைந்தார்.

கழுத்தில் பாம்புடன்
ஆனால் அவர் வெளியிட்ட வீடியோவில் அவரது முகம் முழுவதும் தெரியாமல் போனதால் ரசிகர்கள் ரொம்பவே வருத்தப்பட்டனர். இந்நிலையில் சிம்பு நடிக்கும் 'ஈஸ்வரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று முன்தினம் வெளியானது. இதில் கழுத்தில் பாம்புடன் செம ஸ்மார்ட்டாக இருந்தார் சிம்பு.

ரொம்பவே உருக்கம்
இதில் உடல் எடையைக் குறைத்திருக்கும் சிம்புவின் லுக் ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சிம்புவின் தீவிர ரசிகை ஒருவர் சமூக வலைதளத்தில் ரொம்பவே உருக்கமாக அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

வாழ்க்கை நிலையில்லாதது
டிவிட்டரில் அவர் பகிர்ந்திருப்பதாவது, எனக்கு கடந்த 3 நாட்களாக தொண்டை வலி, தலைவலி மற்றும் காய்ச்சல் உள்ளது. என்னால் எதையும் பதிவு செய்ய முடியவில்லை. வாழ்க்கை நிலையில்லாதது என்பதை புரிந்து கொண்டேன்.

வந்ததற்கு நன்றி
எனக்கு அடுத்து என்ன நடக்கும் என தெரியாது, எல்லாம் கடவுளின் கையில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும் டியர் எஸ்டிஆர் சார், நமஸ்கார், நீங்கள் எங்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் சமூக வலைதள பக்கம் வந்ததற்கு நன்றி. நாங்கள் இப்போது முழுமையடைந்துள்ளோம்.

நீங்கள் இன்ஸ்பைரேஷன்
உங்கள் படத்தின் மோஷன் போஸ்டர் என்னை மெய்சிலிர்க்க வைத்தது, அதை பார்த்து எனக்கு பேச்சே வரவில்லை. என் வாழ்க்கையில் நீங்கள் மட்டும் தான் இன்ஸ்பைரேஷன். உங்களின் வசனங்கள், பாடல்கள், படங்கள் மூலம் எனக்கு நம்பிக்கை, அன்பு, உற்சாகம் கிடைக்கின்றது. அதற்கு நன்றி.

எல்லாம் உங்களால்தான்
நீங்கள் தான் பெஸ்ட்.. இன்னைக்கு நான் என்னவாக இருக்கிறேனோ.. நாளை என்னவாக இருப்பேனோ.. எல்லாம் உங்களால்தான். ஆல் த பெஸ்ட் சார்.. இப்படிக்கு உங்களின் பக்தை அங்கிதா என முழு கடிதத்தையும் கைப்பட பேனாவால் எழுதி டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

கண் கலங்கிய சிம்பு
தனது ரசிகையின் இந்த கடிதத்தை பார்த்த நடிகர் சிம்பு கண் கலங்கியதாக அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மகத் கூறியுள்ளார். நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களாக மரணத்தை சந்திக்கும் பிரபலங்களுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











