நான்தான் ஹீரோ.. நீங்க எல்லாம்.. சிம்பு கூறிய குட்டிக்கதை.. அண்ணாமலை பாணியில் தனுஷுக்கு சவால்?

நான்தான் ஹீரோ, நான் தோல்வி அடைந்து கீழே இருந்தாலும் மக்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று நடிகர் சிம்பு பேசி உள்ளார்.

சென்னை: நான்தான் ஹீரோ, நான் தோல்வி அடைந்து கீழே இருந்தாலும் மக்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று நடிகர் சிம்பு பேசி உள்ளார். அவர் தனது பேச்சில் சொன்ன குட்டி கதை பெரிய வைரலாகி உள்ளது.

Recommended Video

Simbhu Power packed Speech | Nakshatra 2020 | Dhanalakshmi Srinivasan College | STR

மாநாடு படம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கியது.

இயக்குனர் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி என்று பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

சிம்பு பேசினார்

சிம்பு பேசினார்

இந்த நிலையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் சிம்பு கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் சிம்பு சொன்ன குட்டி கதை பெரிய வைரலாகி உள்ளது. அவர பேசியதாவது, ஒருவன் படத்தில் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருப்பான். அவனுக்கு தோல்வியே கிடையாது. எல்லாம் அவனுக்கு எளிதாக கிடைக்கும். அவனை எல்லோரும் நல்லவன் என்று நினைப்பார்கள். ஆனால் கடைசியில் அவன் தோற்றுவிடுவான்.

ஹீரோ யார்

ஹீரோ யார்

இவனுக்கு பெயர்தான் ஸீரோ. அதே சமயம் இன்னொரு பக்கம் இன்னொருவன் வாழ்க்கையில் தோல்வி அடைந்து கொண்டே இருப்பான். அவனை ஒடுக்க முயற்சி செய்வார்கள். அவனை வளர விட மாட்டார்கள். அவனுக்கு பிரச்சனைகளை தந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் அவன் கடைசியில் வெற்றிபெறுவான். அவனை ஹீரோ என்பார்கள்.

ஹீரோ நான்

ஹீரோ நான்

அப்படித்தான் நிஜ வாழ்க்கையிலும் பிரச்சனையே இல்லாமல் இருப்பவன் பெயர் என்ன தெரியுமா. அவன் பெயர் ஸீரோ. ஆனால் என்னை தடுத்தார்கள், என்னை வளர விடாமல் செய்தார்கள். எனக்கு அடுத்தடுத்து பிரச்சனை செய்தார்கள். ஆனால் இப்போது நான் வளர்ந்து நிற்கிறேன். நான் ஹீரோவாக நிற்கிறேன். ஹீரோவாக என்னை மக்கள் ஆக்கி உள்ளனர்.

கதை

கதை

நான் இதற்கு சந்தோஷப்படுகிறேன். அண்ணாமலை படத்தில் எல்லாம் இழந்த பின் ரஜினி சவால் விடுவார். மேலே இருப்பவன்தான் வில்லன், கீழே இருப்பவன்தான் சூப்பர் ஸ்டார். நான் இப்போது கீழே இருக்கிறேன். ஆனால் சந்தோசமாக இருக்கிறேன். நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன், என்று சிம்பு கூறியுள்ளார்.

சவால் விட்டார்

சவால் விட்டார்

சிம்பு கூறிய இந்த கதைக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கதை சொல்லும் போது ரசிகர்கள் ஆரவாரமாக கோஷம் எழுப்பினார்கள்.நடிகர் சிம்பு, நடிகர் தனுஷைத்தான் இப்படி மறைமுகமாக எச்சரிக்கிறார், சவால் விடுகிறார் என்று அவரின் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X