கொரோனா பிரச்னை முடிந்ததும் திருமணம்.. லண்டன் பெண்ணை மணக்கிறார் சிம்பு..? கோலிவுட்டில் பரபரப்பு

By

சென்னை: நடிகர் சிம்பு, லண்டனைச் சேர்ந்த பெண்ணை மணக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Recommended Video

Simbu Marriage with London Girl | Maanadu, Maha, #STR wife

நடிகர் சிம்பு, இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷனும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன், மனோஜ், டேனியல் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இஸ்லாமிய இளைஞர்

இஸ்லாமிய இளைஞர்

சிம்பு, அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடந்தது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. சில நாட்கள் அங்கு ஷூட்டிங் நடந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழு சென்னைத் திரும்பியது.

விடிவி கணேஷ்

விடிவி கணேஷ்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சிம்புவின் நண்பரும் நடிகருமான விடிவி கணேஷ், 'சிம்புவின் திருமணத்தை உங்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன். விரைவில் அவர் திருமணம் நடக்கும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்த செய்தி பரபரப்பானது.

லண்டன் மணமகள்

லண்டன் மணமகள்

சிம்புவுக்குத் திருமணம் பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் மணமகள், லண்டனைச் சேர்ந்தவர் என்றும் சிம்புவின் குடும்பத்தினருக்கு தூரத்து உறவினர் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பிரச்னை முடிந்ததும் அவர் திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மீண்டும் பரபரப்பு

மீண்டும் பரபரப்பு

ஏற்கனவே, சிம்புவுக்கும், அவர் உறவினருக்கும் விரைவில் திருமணம் என்று கடந்த ஆண்டு செய்தி வெளியானது. இதை சிம்பு மறுத்திருந்தார். எனக்குத் திருமணம் முடிவு செய்யப்பட்டால் நானே முறையாக அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் திருமணம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

நடிகர் சிம்பு, நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார். இந்த காதல் முறிந்ததை அடுத்து, நடிகை ஹன்சிகாவை காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் இந்த காதலும் முறிந்தது. இன்னும் சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டிருந்தார் சிம்பு. இப்போது அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ள்னர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X