Maanaadu 2: மீண்டும் இணையும் மாநாடு கூட்டணி.. காத்திருக்கும் வெங்கட் பிரபு சம்பவம்!
சென்னை: நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் மாநாடு. இந்தப் படம் டைம் லூப் பாணியில் உருவாக்கப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்புவின் ரீ என்ட்ரி சிறப்பாக அமைந்தது. படம் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில் அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களையும் வெற்றி படமாக்கி ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருந்தார் சிம்பு. தற்போது எஸ்டிஆர் 48 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் சென்னையில் துவங்க உள்ளது.
எஸ்டிஆர் 48 படத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் வில்லன் மற்றும் ஹீரோ என இரு வேறு கேரக்டர்களில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிம்பு பிறந்தநாளையொட்டி வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் அவருடன் முன்னணி பாலிவுட் ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரிக்கவுள்ளது.

மாநாடு படம்: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா இணைந்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் மாநாடு. டைம் லூப் அடிப்படையில் உருவாகியிருந்த இந்தப் படத்தின் திரைக்கதையை மிகவும் கவனத்துடன் ரசிகர்களை கவரும் வகையில் அமைத்திருந்தார் வெங்கட் பிரபு. இந்த படத்தில் சிம்புவின் லுக், கல்யாணி பிரியதர்சனின் பிரஷ்னஸ், எஸ்ஜே சூர்யாவின் அதிரடி நடிப்பு உள்ளிட்டவை மிகப்பெரிய பலமாக அமைந்து படத்தை 100 கோடி கிளப்பில் இணைத்தது. இந்தப் படத்தில் கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் திரைக்கதையில் சிறிது சொதப்பியிருந்தாலும் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கும்.
சிம்புவின் ரீஎன்ட்ரி: கதைக்களத்தை சிறப்பாக அமைத்து படத்தின் வெற்றியை வெங்கட் பிரபு உறுதி செய்திருந்தார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இருந்த நிலையில் படத்தின் பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. இந்த படம் சிம்புவின் கேரியரில் அவருக்கு மீண்டும் கைக்கொடுத்த படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களையும் ஹீட்டாக்கி ஹாட்ரிக் வெற்றியாக கொடுத்திருந்தார் சிம்பு. தற்போது எஸ்டிஆர் 48 படத்தில் தேசிங்கு பெரியசாமியுடன் இணைந்து நடிக்க உள்ளார் சிம்பு.
எஸ்டிஆர்48 படம்: இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டுடன் பிரம்மாண்டமாக வரலாற்று பின்னணியில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை மிகச் சிறப்பாக மாற்றி உள்ள சிம்பு, படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ், குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளிலும் வெளிநாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி அவர் தொடர்ந்து வெளிநாட்டிலேயே முகாமிட்டுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக அவர் மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்து மாநாடு 2 படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
விரைவில் மாநாடு 2: இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவும் சிம்புவும் இணைந்து மீண்டும் அதிரடி சரவெடியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிப்பாரா என்பது குறித்து விரைவில் உறுதி செய்யப்படும். விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கில் மும்முரம் காட்டி வருகிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்தில் நிறைவடைய உள்ள நிலையில் ஆகஸ்ட் 23ம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாநாடு 2 படத்தில் வெங்கட் பிரபு கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











