முடிவுக்கு வரும் சிம்புவின் சிங்கிள் ஆட்டம்... அடுத்தக் கட்டத்துக்கு ரெடியான மன்மதன்!
சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்தில், சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ளார்.
இந்நிலையில், பல வருடங்களாக திருமணமே செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் சிம்பு, அடுத்தக் கட்டத்துக்கு ரெடியாகிவிட்டாராம்.
அதன்படி, விரைவில் சிம்புவுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ரிலீஸுக்கு ரெடியான பத்து தல
சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதனிடையே கடந்த 3ம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தில் இருந்து முதல் பாடலையும் படக்குழு வெளியிட்டது. ஏஆர் ரஹ்மான் இசையில், அவரே பாடியிருந்த நம்ம சத்தம் என்ற இந்தப் பாடல், சிம்பு ரசிகர்களுக்கு எனர்ஜிட்டிக்காக அமைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சிம்புவின் போஸ்டர்களும் வெளியாகி வைரலானது.

விரைவில் டும் டும் டும்
கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் வெளியான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக் தான் சிம்புவின் பத்து தல என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக சிம்பு நடித்துள்ளார். இந்நிலையில், இத்தனை வருடங்களாக திருமணமே செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார் சிம்பு. நயன், ஹன்ஸிகா என பிரபல நடிகைகளுடன் சிம்புவுக்கு காதல் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி, இறுதியில் எல்லாமே பொய்யாகிவிட்டன.

இலங்கை பெண்ணுடன் திருமணம்
காதல் தோல்வி, சினிமாவில் ஃபீல்ட் அவுட் என இருக்கும் இடம் தெரியாமல் இருந்த சிம்பு, மாநாடு படத்தில் இருந்து மாஸாக ரவுண்டு கட்டி வருகிறார். கடந்தாண்டு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் சிம்புவின் கேரியரில் தரமான சம்பவம் செய்தது. அடுத்து வரப்போகும் பத்து தல படமும் சூப்பஸ் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தான் சிம்புவுக்கு அவரது குடும்பத்தார் பெண் பார்த்து பேசி முடித்துவிட்டார்களாம். அந்தப் பெண் இலங்கையச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகள் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் திருமண தேதி?
40 வயதில் அடியெடுத்து வைத்துள்ள சிம்புவுக்கு இந்தாண்டு இறுதிக்குள் திருமணத்தை முடித்துவைக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளார்களாம். சிம்புவும் அதற்கு ஓக்கே சொல்லிவிட்டதாகவும், அதனால் விரைவில் திருமண தேதி குறித்து அறிவிப்பு வரும் எனவும் கூறப்படுகிறது. முரட்டு சிங்கிளாக வலம் வந்துகொண்டிருக்கும் சிம்புவுக்கு திருமணம் என்ற செய்தியால், அவரது ரசிகைகள் மனமுடைந்து காணப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications











