மாஸ்.. கொலை மாஸ்.. பிரபல தயாரிப்பாளருடன் நடிகர் சிம்பு.. அடுத்த பட கூட்டணியா? வைரலாகும் போட்டோ!
சென்னை: நடிகர் சிம்பு பிரபல தயாரிப்பாளருடன் எடுத்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. கடைசியாக அவரது நடிப்பில் ஈஸ்வரன் படம் வெளியானது.
அதற்கு முன்பாகவே நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தை தொடங்கினார். ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை.

தயாரிப்பாளருடன் சந்திப்பு
தொடர்ந்து பத்து தல என்ற படத்திலும் கவுதம் மேனன் இயக்கும் படம் ஒன்றிலும் நடிக்கிறார் சிம்பு. இந்நிலையில் நடிகர் சிம்பு, லிப்ரா புரடெக்ஷன் தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரை சந்தித்துள்ளார்.

பார்த்தா தெரியாது நட்பு
இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோவை லிப்ரா புரடெக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அதாவது மாஸ்.. கொலை மாஸ்..
பார்த்தா தெரியாது நட்பு
பழகினால் தான் தெரியும் நட்பு
இவர் மேல சில பேருக்கு வெறுப்பு
அதற்கு அவர் இல்லை பொறுப்பு
என்று கவிதையாக பதிவிட்டுள்ளார்.

அதிகம் பேசுவாங்க
மேலும் நாங்கள் பொதுவாக குறைவா பேசுபவர்கள், ஆனால் மக்கள் எங்களை பற்றி அதிகம் பேசுவார்கள், அதனால்தான் அவர் எஸ்டிஆர் நான் குண்டு மனிதர்.. ஸ்டே ட்யூன்ட் என்றும் ரவீந்தர் சந்திரசேகர் பதிவிட்டுள்ளார்.

அப்டேட் தரப்போறீங்களா?
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் சிம்புவை வைத்து படம் தயாரிக்க போகிறீர்களா என கேட்டு வருகின்றனர். ஸ்டே ட்யூன்ட் என ரவீந்தர் குறிப்பிட்டுள்ளதை பார்த்த நெட்டிசன்கள் ஏதாவது அப்டேட் கொடுக்கப் போகிறீர்களா என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











