Simbu 49: கையில பேண்ட் …கழுத்துல பிளேடு..தெறிக்கவிட்ட சிம்பு!
சென்னை: நடிகர் சிம்பு இப்போது கமல் - மணிரத்னத்தின் கூட்டணியில் 'தக் லைஃப்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கமலின் போர்ஷன் நிறைவு பெற்றது. ஆனால் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் இரண்டு வார படப்பிடிப்பு இருக்கிறது. அதில் சிம்புவின் போர்ஷன் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிம்பு நடிப்பில், அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் உருவாகி வரும் சிம்பு 49 படத்தின் போட்டோஷூட் வீடியோவை தீபாவளி ஸ்பெஷலாக படக்குழு வெளியிட்டுள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் சிம்புக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி சிம்புவை மீண்டும் உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிட்டது. இதைத் தொடர்ந்து, எஸ்டிஆர் 48 படத்திற்காக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும் எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்து நீண்ட முடியுடன் இருக்கும் போட்டோவை படக்குழு வெளியிட்டு இருந்தது.

சிம்பு 49: சிம்பு 48 படம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாததால், ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இதையடுத்து, சிம்புவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது. சிம்பு 49 படத்தை ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். தற்போது இவர், நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், விஜே சித்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கையில பேண்ட் ...கழுத்துல பிளேடு: இந்நிலையில், தீபாவளி ஸ்பெஷலாக ஏஜிஎஸ் நிறுவனம் சிம்புவின் 49வது படத்தின் போட்டோஷுட் வீடியோவை வெளியிட்டுள்ளது. படத்தின் போஸ்டரில் சிம்பு, வல்லவன், மன்மதன் ஆகிய படங்களின் ரெபரென்ஸ் காட்சிகள் என பல விஷயங்கள் கவர்ந்து இழுக்கும் வகையில் வைத்திருந்தது.தற்போது வெளியாகி இருக்கும் அந்த வீடியோவில், நீண்ட தலைமுடி.. கையில பேண்ட் ...கழுத்துல பிளேடு..வின்டேஜ் லுக்கில் மிரட்டலாக இருக்கிறார். இந்த போட்டோஷூட் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் சிம்பு வேற லெவலில் இருக்கிறார் நிச்சயமா படமும் வேற லெவலில் இருக்கும் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











