Simbu birthday: சிம்புவிற்கு சூப்பராக பிறந்தநாள் வாழ்த்து.. எப்படில்லாம் யோசிக்கிறாங்க!
சென்னை: நடிகர் சிம்பு தனது 41வது பிறந்தநாளை நேற்றைய தினம் கொண்டாடியுள்ளார். இதையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். சென்னையில் பல்வேறு இடங்களில் சிம்புவின் பிறந்தநாள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும் சிம்பு தற்போது கமிட்டாகியுள்ள STR48 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இருவேறு கேரக்டர்களில் சிம்பு நடிக்கவுள்ள நிலையில், இந்த இரு கேரக்டர்களின் பர்ஸ்ட் லுக் தற்போது ஒரே போஸ்டராக வெளியாகியுள்ளது.
படத்தின் சூட்டிங் இம்மாத மத்தியில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் இருந்தாலும் படம் கிளாசிக்கலாக இருக்காது என்றும் தர லோக்கலாகத்தான் இருக்கும் என்றும் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி முன்னதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். முன்னதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ள அவரது இந்த வரலாற்று முயற்சி எப்படி அமையும் என்று அறிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படம் அடுத்த ஆண்டில்தான் ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலேயே அறிவிக்கப்பட்ட இந்தப் படம் இந்த ஆண்டில்தான் சூட்டிங் துவங்கவுள்ளது.

நடிகர் சிம்பு: நடிகர் சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தன. இந்தப் படங்களை தொடர்ந்து கமல்ஹாசனின் தயாரிப்பில் STR48 படத்தில் இணைந்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டிலேயே வெளியான நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் அதிக காலத்தை எடுத்துக் கொண்டது. இதனால் இம்மாத மத்தியில்தான் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.
சிம்பு பிறந்தநாள்: நேற்றைய தினம் படத்தின் நாயகன் சிம்பு பிறந்தநாளையொட்டி கடந்த 2ம் தேதி மாலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்தின் தயாரிப்பாளர் நடிகர் கமல்ஹாசன் இந்த போஸ்டரை வெளியிட்டிருந்தார். சிம்புவிற்கு பிறந்தநாளை வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார். சிம்புவின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். மேலும் சென்னை முழுவதிலும் சிம்புவின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. சிம்புவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் மிரட்டலான வகையில் வெளியாகியிருந்தது.
STR48 பர்ஸ்ட் லுக்: படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இருவேறு கேரக்டர்களில் சிம்பு நடிக்கவுள்ளார். இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ஆக்ரோஷமான மற்றும் இயல்பான சிம்புவை எதிரெதிரில் பார்க்க முடிந்தது. படத்தின் சூட்டிங் இம்மாதத்தில் துவங்கவுள்ள நிலையில் முன்னதாக வெளிநாடுகளில் மார்ஷியல் ஆர்ட்ஸ், குதிரையேற்றம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்ட சிம்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார். நீண்ட தலைமுடியும் மாஸாக காணப்படும் சிம்புவின் இந்த லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

ரசிகர்கள் கொண்டாட்டம்: இந்நிலையில் நேற்றைய தினம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்ட அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களிலும் அவற்றை ட்ரெண்டாக்கினர். இதனிடையே, சிம்புவின் ரசிகர்களில் சிலர் பிரம்மாண்டமான மைதானத்தில் கார்களை வைத்து STR என வடிவமைத்திருந்தனர். இதை மேலிருந்து வீடியோ எடுத்து அவற்றையும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர். தொடர்ந்து இந்த வீடியோவில் அவர்கள் HBD STR என்றும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











