Simbu: ஸ்டைலிஷ் லுக்கில் கெத்து காட்டும் சிம்பு.. மீண்டும் வீடியோ வெளியிட்ட தக் லைஃப் டீம்!
சென்னை: நடிகர் சிம்புவின் அடுத்தடுத்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்கள் ரிலீசாகி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தன. எப்போதும் சர்ச்சை நாயகனாக இருந்துவரும் சிம்பு சமீப காலங்களில் ஒழுங்கு பிள்ளையாக சூட்டிங் ஸ்பாட்டில் நடந்துக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு வரலாற்று ஜானரில் நடிக்கவிருந்த எஸ்டிஆர்48 படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆயினும் கமலுடனேயே அவரது தயாரிப்பில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு.

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு கடந்த 1984ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். 6 மாத குழந்தையாக இருந்த போதிலேயே தன்னுடைய அப்பா டி ராஜேந்தர் படத்தில் நடித்துவிட்டார் சிம்பு. தொடர்ந்து சிறுவனாக இவரது படங்கள் சிறப்பாக அமைந்தன. ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் காதல் அழிவதில்லை படம் மூலம் அறிமுகமானார். தமிழில் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகிறார். சமீபத்தில் டிராகன் படத்தில் இவர் பாடிய பாடல் வெளியாகி மாஸ் காட்டியது.
தக் லைஃப் படம்: முன்னதாக கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் களமிறங்கியிருந்தார் சிம்பு. வரலாற்று ஜானரில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் படம் இன்னும் துவங்கப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசனின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ளார் சிம்பு. படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். படம் வரும் ஜூன் 5ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு பிறந்தநாள்: இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் சிம்பு. இதையொட்டி அவரது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எஸ்டிஆர்49 மற்றும் எஸ்டிஆர் 51 படங்களின் அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே கமல்ஹாசனுடன் சிம்பு நடித்துள்ள தக் லைஃப் படத்தின் சிம்புவின் கேரக்டர் வீடியோவும் இன்று காலையிலேயே வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் மாஸாக காணப்பட்டார் சிம்பு.
2 வீடியோக்களை வெளியிட்ட தக் லைஃப் டீம்: இதனிடையே சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் இன்னும் நிறைவடையவில்லை என்னும்படியாக தற்போது தக் லைஃப் படத்தின் மற்றொரு சிம்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் தன்னுடைய நீண்ட தலைமுடியுடன் மிகச்சிறப்பான லுக்கில் காணப்படுகிறார் சிம்பு. மேலும் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட காட்சிகளும் இந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்டவர்களும் இந்த வீடியோவில் காணப்படுகின்றனர். சிம்புவின் பிறந்தநாளையொட்டி படத்தின் பிரமோஷனை தற்போதே துவங்கியுள்ளது தக் லைஃப் டீம். மீண்டும் ஒருமுறை சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகிரப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











