சிம்புவுக்கு தெலுங்கில் இவ்வளவு வெறித்தனமான ரசிகர்களா? 20 வருஷம் கழித்து ரீ-ரிலீஸ் ஆன மன்மதன் படம்!

சென்னை: நடிகர் சிம்பு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். தன்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர். ஆறு மாத குழந்தையாக இருந்தபோதே தன்னுடைய படங்களில் அவரது அப்பாவும் பிரபல இயக்குநருமான டி ராஜேந்தர் சிம்புவை தன்னுடைய படங்களில் நடிக்க வைத்துவிட்டார்.

தொடர்ந்து சிறுவனாகவும் நாயகனாகவும் சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக இவர் சினிமாவில் நடித்து வரும் நிலையில், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என பன்முக திறமையுடன் தொடர்ந்து வருகிறார். தற்போது கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

simbu manmadhan movie tamil cinema

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாகவே தன்னுடைய பயணத்தை சினிமாவில் துவங்கியவர். இவரது அப்பாவும் பிரபல இயக்குநருமான டி ராஜேந்தர் இயக்கத்தில் 6 மாத குழந்தையாகவே இவர் நடிக்க துவங்கிவிட்டார். தொடர்ந்து சிறுவனாகவும் நாயகனாகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தொடர்ந்து 40 ஆண்டுகளாக சினிமாவில் தன்னை இணைத்து வரும் சிம்பு, இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பல்வேறு தளங்களில் பயணித்து வருகிறார். இயக்குநராகவும் ஏராளமான ரசிகர்களை சிம்பு கவர்ந்துள்ளார்.

மன்மதன் படம்: சிம்பு நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியானது மன்மதன் படம். இந்தப் படத்தை ஏஜே முருகன் இயக்கியிருந்தார். படத்தில் சிம்புவுடன் ஜோதிகா ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் கூடுதல் பலமாக அமைந்தது. பெண்களை கொலை செய்பவராக இந்தப் படத்தில் சிம்பு நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடி, வசூல் சாதனை செய்தது. ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட் படங்களில் ஒன்றான மன்மதன் படம் தற்போது 20 ஆண்டுகளை கடந்து தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கில் ரீ-ரிலீஸ்: இந்நிலையில் 20 ஆண்டுகளை கழித்து தற்போது இந்தப் படம் தெலுங்கில் மன்மதா என்ற பெயரில் இன்றைய தினம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தற்போது திரையரங்குகளில் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரையரங்க வாயிலில் மட்டுமில்லாமல் உள்ளேயும் மன்மதனே என்ற பாடலுக்கு அவர்கள் ஆட்டம் போட்டதை பார்க்க முடிந்தது. கடந்த 2004ம் ஆண்டிலேயே தெலுங்கிலும் இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை சிம்புவிற்கு கொடுத்திருந்தது. குறிப்பாக படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவ்ல ரசிகர்களை கொண்டாட செய்தது.

கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்: படத்தில் சிம்புவின் இரட்டை கேரக்டர்கள் மற்றும் அவரது வில்லத்தனம் சிறப்பாக பேசப்பட்டது. படத்தில் நடித்ததுடன் கதை மற்றும் திரைக்கதையையும் அவரே மேற்கொண்டிருந்தார். தற்போது விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்டவர்கள் தெலுங்கில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பே ஏராளமான தெலுங்கு ரசிகர்களுக்கு சொந்தக்காரராக சிம்பு இருந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள மன்மதன் படம், தற்போதும் தெலுங்கு ரசிகர்களை கொண்டாட செய்துவருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X