Actor Simbu: 2018 பட இயக்குநருடன் இணையும் சிம்பு.. யார் தயாரிப்பு தெரியுமா?

சென்னை: நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடுகளிலும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தக் லைஃப் படத்தை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கமல்ஹாசனின் தயாரிப்பில் தன்னுடைய எஸ்டிஆர்48 படத்தில் சிம்பு இணையவுள்ளதாகவும் பிரம்மாணடமாக எடுக்கப்படவுள்ள இந்தப் படத்திற்காக சிம்பு பல்வேறு வகையில் மெனக்கெட்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் உள்ளது.

Simbu Maniratnam Tamil cinema

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் படக்குழுவினர் விரைவில் வெளிநாடுகளில் அடுத்தக்கட்ட சூட்டிங்கை திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்தியன் 2 படத்தின் பிரமோஷன்களில் இணைந்துள்ள கமல்ஹாசன் இம்மாத இறுதியில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப்படத்தை நிறைவு செய்துவிட்டு சிம்பு அடுத்ததாக தன்னுடைய எஸ்டிஆர்48 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அப்டேட் இல்லாத STR48 படம்: இதனிடையே எஸ்டிஆர்48 படம் எந்தவிதமான அப்டேட்டும் அறிவிப்பும் இல்லாமல் போஸ்டர் வெளியிட்டதுடன் நின்றுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் திட்டமிடப்பட்ட நிலையில் இதற்காக நீண்ட தலைமுடி உள்ளிட்டவற்றுடன் மாஸாக காணப்பட்டார் சிம்பு. இதே லுக்குடன்தான் தற்போது தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் இந்தப் படத்தின் சூட்டிங் அறிவிப்பு இல்லாததால் படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018 இயக்குநருடன் இணையும் சிம்பு: இந்நிலையில் அடுத்ததாக வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மலையாளத்தில் 2018 என்ற சிறப்பான படத்தை கொடுத்து அதிக கவனத்தை பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் மோகன்லாலும் முன்னணி கேரக்டரில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் கதையை கேட்டு தயாரிப்புத் தரப்பும் சிம்புவும் மிரண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சில சம்பள பிரச்சினைகள் காரணமாக படத்தின் சூட்டிங் துவங்குவதில் தாமதமாவதாகவும் கூறப்படுகிறது.

அதிக பட்ஜெட்: முன்னதாக லைகா நிறுவனத்துடன் இணைந்து ஜூட் ஆண்டனி ஜோசப் படமியக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டது. இந்தப் படத்தை இயக்க அவருக்கு அட்வான்சும் கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களால் இந்தப் படம் தாமதமாவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக சிம்புவுடன் ஜூட் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மிகவும் அதிகமான பட்ஜெட்டில் இந்தப் படம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X