Actor Simbu: அவதார் படத்தை பின்பற்றும் சிம்பு படம்.. சூட்டிங் எப்ப தெரியுமா?
சென்னை: நடிகர் சிம்பு -தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாகவுள்ள STR48 படத்தின் சூட்டிங் நீண்ட நாட்களாக துவங்காமல் உள்ளது.
இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ள நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்புடன் படம் தற்போது உள்ளது.
வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் பிரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளுக்கு அதிகமான நேரம் எடுப்பதால் படத்தின் சூட்டிங் தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு: நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான பத்து தல படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக கமல்ஹாசனின் தயாரிப்பில் தன்னுடைய STR48 படத்தில் கமிட்டாகியுள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படம் வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ளதால் பிரீ புரொடக்ஷனுக்காக படக்குழுவினர் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அதனால்தான் இந்தப் படத்தின் சூட்டிங் தாமதமாவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவேறு கேரக்டர்கள்: இந்தப் படத்தில் சிம்பு ஹீரோ மற்றும் வில்லன் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி, மீசை என வலம்வருகிறார் சிம்பு. இதனிடையே சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளிநாட்டில் இந்தப் படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்றுவந்த சிம்பு, தற்போது தன்னுடைய பிட்னசை மேம்படுத்துவதற்காக துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் டெஸ்ட் சூட் சென்னையில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான தயாரிப்பு: விரைவில் இதன் வீடியோவை படக்குழுவினர் வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகுபலி போன்று மிகுந்த பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் அதற்காக தற்போது முன் தயாரிப்புப் பணிகள் அதிக காலம் பிடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் 3வது வாரத்தில் துவங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூட்டிங் குறித்த திட்டம்: தொடர்ந்து 30 நாட்கள் இந்தப் படத்தின் சூட்டிங்கை இடைவெளி இல்லாமல் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அதைதொடர்ந்து 30 நாட்கள் இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பை துவங்கி ஜூலை மாதம் இறுதிவரை இந்தப் படத்தின் சூட்டிங்கை தொடர படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. படம் 2025ம் ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவதாரை தொடரும் STR48 படம்: ஹாலிவுட்டில் வெளியான அவதார் படத்தின் மொத்த சூட்டிங்கும் 37 நாட்களில் நடந்த நிலையில், அதன் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஆண்டுக்கணக்கில் இழுத்தது. அதேபோல STR48 படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையும் என்றும் ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள், சிஜி வேலைகள் அதிகமான காலத்தை எடுத்துக் கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் 2025ம் ஆண்டில் பொங்கல் ரிலீசாக படம் ரிலீசாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











