Actor Simbu:பிப்ரவரி இறுதியில் துவங்கும் STR48 படம்.. இம்மாதம் சென்னை திரும்பும் சிம்பு!

சென்னை: நடிகர் சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல படங்கள் ரிலீசாகி அவருக்கு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்நிலையில் சிம்புவின் 48வது படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்தப் படம் வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ளதாகவும் படத்தில் சிம்பு ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியான நிலையில் படத்தின் சூட்டிங்கை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் அதிக காலத்தை எடுத்துக் கொண்டுள்ளதால் படத்தின் சூட்டிங் தாமதமாகியுள்ளது. இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்றுள்ளார். தற்போதும் அவர் வெளிநாட்டிலேயே உள்ளார். இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடியுடன் சிம்பு காணப்படுகிறார். மேலும் உடல் எடை குறைத்தும் காணப்படுகிறார் சிம்பு. மேலும் இந்தப் படத்திற்காக பல பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Simbus STR48 movie shooting to start by the end of February it seems

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு தனது அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கதைத்தேர்வை மேற்கொண்டு வருகிறார். அவரது மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த படங்கள் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளன. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் தன்னுடைய STR48 படத்தில் கமிட்டாகியுள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்திற்காக வெளிநாடுகளில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்றுள்ளார் சிம்பு. மேலும் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் தற்போது சிம்பு காணப்படுகிறார்.

STR48 படம்: STR48 படம் குறித்து சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் அதிக காலங்களை எடுத்துக் கொண்டதால் படத்தில் சூட்டிங் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் சிம்புவே நடிக்கவுள்ளார். இதனிடையே படத்தின் சூட்டிங் அடுத்தமாதம் இறுதியில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி இம்மாத இறுதியில் செட் வேலைகள் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட செட்: படத்தின் 90 சதவிகித சூட்டிங் பிரம்மாண்டமாக செட்கள் அமைக்கப்பட்டு எடுக்கப்பட உள்ளதாகவும் படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது துபாயில் இருக்கும் சிம்பு, இந்தப் படத்தின் சூட்டிங் மற்றும் முன்தயாரிப்பு பணிகளுக்காக இம்மாத இறுதியில் சென்னை திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக படம் அறிவிப்புடன் நின்றதால், படம் டிராப் ஆனதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளால் படத்தின் சூட்டிங் தாமதமாவதாக தேசிங்கு பெரியசாமி தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

சிம்புவின் திட்டம்: இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கை முன்னிட்டு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ள 30 பேர் கொண்ட குழுவினர் ராஜ்கமல் அலுவலகத்தில் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆக்ஷன் மிரட்டலாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பத்து தல படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் கமிட்டான சிம்பு, இந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டே அடுத்தப்படத்தில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X