Simbu: STR48 படத்தில் இரட்டை வேடம்.. சிம்புவிற்கு ரகசியமாக எடுக்கப்பட்ட லுக் டெஸ்ட்!
சென்னை: நடிகர் சிம்புவின் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் அவரது ரசிகர்களுக்கு தொடர்ந்து உற்சாகத்தை அளித்து வருகின்றன.
மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த ஹிட்களை அடுத்து சிம்புவின் அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் இணைந்துள்ளார் சிம்பு. படத்தின் சூட்டிங் நவம்பர் மாதத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பரில் துவங்கும் சிம்புவின் STR48 படத்தின் சூட்டிங்: நடிகர் சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் அவரை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்தப் படங்களின் உற்சாகத்துடன் அடுத்ததாக தன்னுடைய STR48 படத்தின் சூட்டிங்கிற்காக தயாராகியுள்ளார். தொடர்ந்து சிம்பு கொடுத்துள்ள ஹாட்ரிக் வெற்றி, அவரது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தப்படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.
அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு கமிட்டாகியுள்ளார். இந்தப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் ஏறக்குறைய 90 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. வரும் நவம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிம்பு அண்ணன் -தம்பி என இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்பட உள்ள STR48 படத்தில் மகுடத்திற்காக போராடும் சகோதரர்களின் கதையை மையமாக கொண்டு கதைக்களம் அமையவுள்ளதாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் சென்னையில் இதற்கான லுக் டெஸ்ட் சிம்புவிற்கு எடுக்கப்பட்டுள்ளது. இதில் இருவேறு லுக்கில் அவர் தோன்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்தப் படத்திற்காக வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்சை கற்று தேர்ந்துள்ளார் சிம்பு.

சிம்புவின் கேரியரில் பெஸ்ட்டாகவும் பிரம்மாண்டமான படமாகவும் STR48 எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்காக நீண்ட தாடி, மீசை, தலைமுடி என மாஸ் காட்டி வருகிறார் சிம்பு. படத்தின் சூட்டிங் நவம்பரில் துவங்கவுள்ள நிலையில், தற்போது லண்டனில் படத்திற்காக பிட்னஸ் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது சிம்புவின் லுக் டெஸ்ட் சென்னையின் ஒரு முன்னணி ஸ்டூடியோவில் ரகசியமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவரது லுக் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தின் காஸ்ட்யூம், செட் வேலைகள் மற்றும் லொகேஷன்கள் காரணமாக படத்தின் சூட்டிங்கை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள சிம்புவிற்கு யார் ஜோடியாவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் விரைவில் படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் சூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











