Actor Simbu: ஒண்ணு கியாரா.. அப்ப மற்றொருவர்.. சிம்புவின் STR48 பட அப்டேட் இதோ!
சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான படம் பத்து தல. இந்தப் படத்தை தொடர்ந்து எஸ்டிஆர் 48 படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் அவர் கமிட்டாகி இருந்தார். இந்தப் படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் பழகி வந்தார். படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இருவேறு கேரக்டர்களில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதையொட்டி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் படத்தில் சிம்புவுடன் இரண்டு நாயகிகள் இணையவுள்ளதாக கூறப்பட்டது. வரலாற்று பின்புலத்தில் உருவாகவுள்ள எஸ்டிஆர் 48 படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நாயகி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் மற்றொரு நாயகி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் அறிவிக்கப்பட்ட படம் எஸ்டிஆர் 48/ இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க கமிட்டாகியுள்ள சூழலில் இந்த படத்திற்காக சிம்பு மிகப்பெரிய மெனக்கெடல்களை மேற்கொண்டிருந்தார். இந்த படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியில் அவர் பல மாதங்கள் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து நீண்ட தலைமுடியை வளர்த்து தன்னுடைய கெட்டப்பை மாற்றியிருந்தார். இந்நிலையில் இந்தப் படம் பல மாதங்களை கடந்த நிலையிலும் இன்னும் ஷூட்டிங் துவங்கப்படாமல் உள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
STR48 படம்: படத்தின் ஷூட்டிங்கிற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சில மாதங்களுக்கு முன்பு அப்டேட் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதில் இருவேறு கெட்டப்புகளில் சிம்பு காணப்பட்டார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் தொடர்ந்து காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல மாதங்களாக இந்தப் படத்திற்காக காத்திருந்த சிம்பு, தற்போது கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளார்.
தக் லைஃப் படத்தில் சிம்பு: சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடத்தப்பட்ட தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் கமல்ஹாசனுடன் சிம்புவும் கலந்து கொண்டார். இவர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தேசிங்கு பெரியசாமி தற்போத ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
STR48 படத்தில் இணைந்த கியாரா?: படத்தில் சிம்புவிற்கு இரண்டு நாயகிகள் உள்ளதாக கூறப்பட்ட சூழலில், தற்போது அதில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒரு நாயகி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள சூழலில் இந்த படத்திற்கு பாலிவுட் நடிகையை படக்குழுவினர் தேர்ந்தெடுக்கின்றனர். இதனிடையே படத்தின் மற்றொரு நாயகி குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











