சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த கொண்டாட்டம்.. வாவ் எஸ்டிஆர்51 பட அறிவிப்பும் வந்தாச்சு
சென்னை: நடிகர் சிம்புவின் எஸ்டிஆர் 48 படம் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியான நிலையில் படத்தின் சூட்டிங் இன்னும் துவங்கப்படவில்லை.
இந்நிலையில் இன்றைய தினம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி அவரது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. எஸ்டிஆர் 49 மற்றும் எஸ்டிஆர் 51 படங்களின் அறிவிப்புகள் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சிம்பு நடித்து முடித்துள்ள தக் லைஃப் படத்தின் அவரது கேரக்டர் வீடியோவும் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த அறிவிப்புகளால் ரசிகர்கள் திக்கு முக்காடியுள்ளனர்.

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு இன்றைய தினம் தன்னுடைய நாற்பத்தி இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இன்றைய தினம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவர் ட்ரெண்டிங்கில் உள்ளார். காலையிலேயே அவரது அடுத்த படமான எஸ்டிஆர்49 படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்த இயக்க உள்ளதாகவும் பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
STR49 பட அறிவிப்பு: படத்தின் அறிவிப்பு போஸ்டரும் வெளியிடப்பட்ட நிலையில் நடிகர் சிம்பு இந்த போஸ்டரில் கையில் புத்தகத்துடனும் அந்த புத்தகத்தில் ரத்தக்கரை படிந்த கத்தியும் காட்டப்பட்டுள்ளது. படத்தில் சிம்பு இன்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் தற்காலிகமாக எஸ்டிஆர் 49 என்று வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்புவின் பிறந்த நாளையொட்டி அவர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ள தக் லைப் படத்தின் கேரக்டர் வீடியோவும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவரது லுக் மாஸாக காணப்படுகிறது.
STR51 பட அறிவிப்பு: இதையடுத்து தற்போது சிம்புவின் எஸ்டிஆர் 51 படத்தின் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஓ மை கடவுளே, டிராகன் போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இந்த படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் படம் ரொமான்டிக் ஜானரில் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் God of Love என்ற அடைமொழியுடன் இந்தப்படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் மன்மதன் படத்தின் வில்லன் லுக்குடன் காணப்படுகிறார் சிம்பு.
மிரட்டலான போஸ்டர்: காதல் இருக்கும் பயத்தில்தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை, மீறி அவன் பூமி வந்தால் என்றும் கேப்ஷனில் கூறப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தேசிங்கு பெரியசாமியுடன் சிம்பு எஸ்டிஆர் 48 படத்தில் இணையவிருந்த நிலையில் இந்த படத்தின் சூட்டிங் தாமதத்தை அடுத்து சிம்பு இடையில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











