கடை திறப்பு விழாவில் பிரபல நடிகருக்கு கத்திக்குத்து

By Siva

பெய்ஜிங்: பிரபல நடிகர் சைமன் யாம் கடை திறப்பு விழாவுக்கு சென்ற இடத்தில் அவரை ஒருவர் கத்தியால் குத்தினார்.

ஹாங்காங்கை சேர்ந்தவர் பிரபல நடிகர் சைமன் யாம்(64).125க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் 40 தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டு வெளியான லாரா கிராஃப்ட் டூம்ப் ரைடர்: தி கிரேடில் ஆஃப் லைஃப் படத்தில் வில்லனாக நடித்தவர்.

Actor Simon Yam stabbed

அவர் சீனாவின் ஜாங்ஷான் நகரில் கடை ஒன்றை திறந்து வைக்க சென்றுள்ளார். மேடையில் அவர் நின்று கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்து ஒருவர் ஓடி வந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் யாமின் வயற்றில் குத்தினார். மேலும் யாமின் வலது கையிலும் அந்த நபர் குத்தினார்.

இந்த சம்பவத்தை அடுத்து யாம் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.

Actor Simon Yam stabbed

கத்திக்குத்து விழுந்தபோது வயிற்றை பிடித்துக் கொண்டு யாம் தடுமாறிய வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த சம்பவத்தை அடுத்து சைமன் யாமை பாதுகாக்க மூன்று பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சைமன் யாமை குத்திய வழக்கில் 53 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு ஒரு நபருக்கு பதில் சைமன் யாம் குத்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. யாமை குத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

குடும்பம், வேலை என்று இருக்கும் யாமை ஏன் கத்தியால் குத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே சிலர் யாமின் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கக் கோரி ஆன்லைன் மூலம் ஏமாற்றியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X