Singam puli: ச்ச, என்ன மனுஷன்யா அவரு.. நடிகர் முரளியை புகழ்ந்த சிங்கம் புலி!
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவரும் நடிகராக இருக்கிறார் சிங்கம் புலி. அதுவும் விஜய்சேதுபதி நடித்த மகாராஜா படத்திற்கு பிறகு, அனைத்து யூடியூப் சேனலிலும் இவரின் பேட்டியைத்தான் பார்க்க முடிகிறது. தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில், மறைந்த நடிகர் முரளி குறித்து பேசி உள்ளார்.
நடிகர் சிங்கம் புலியை நகைச்சுவை நடிகராகத் தான் பலருக்கும் தெரியும். ஆனால், இவர் தல அஜித்தை வைத்து ரெட் திரைப்படத்தையும், சூர்யாவை வைத்து மாயாவி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல், பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் திரைப்படம், நான் கடவுள் ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இப்படி ஏகப்பட்ட திரைப்படங்களையும் சிங்கம் புலி இயக்கியுள்ளார்.

சிங்கம் புலி பேட்டி: இயக்குநராக இருந்த சிங்கம் புலி, நகைச்சுவை நடிகராக மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் எப்பா... எப்பா...நீ செத்தா இந்த கட்டில் எனக்கு தானே...எப்ப சாவே என்று கேட்டு அனைவரையும் சிரிக்கவைத்து இருப்பார். அதே போல, தேசிங்கு ராஜா படத்தில் சா... சார் சா.. உங்களுக்கு சாவே வராதா என்று கேட்கும் டையலாக்கும் சும்மா சிரிப்பு வெடி பறக்கும். இப்படி தனது உடல் மொழியால் நம் மனதில் நகைச்சுவை நடிகராக மிளிர்ந்த சிங்கம் புலி மகாராஜா படத்தில் வேறுவிதமான அவதாரம் எடுத்துள்ளார்.
நெகட்டிவ் ரோல்: அப்படி அவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா. இதில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிங்கம் புலி சபல புத்திக்காரராக நடித்துள்ளார். என்னை இந்த படத்தில் வேறு மாதிரி நினைத்துக் கொண்டு ரசிகர்கள் படத்தை பார்த்துக் கொண்டிருக்க என்னுடைய கதாபாத்திரம் திடீரென மாறியதும் அனைவரும் ஷாக் ஆகிவிடுவார்கள் என்றார். இந்த படத்தை பார்த்த எனது மகன்கள் ஒன்றும் சொல்லவில்லை, கல்லூரி படிக்கும் குழந்தைகளுக்கு இந்த கதாபாத்திரம் புரியாது ஆனால், என் மனைவி இன்னும் இந்த படம் பார்க்கவில்லை படம் பார்த்தபின் என்ன சொல்லப்போகிறார் என்று தெரியவில்லை, இருந்தாலும், சினிமா வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு.
உன்னதமான நடிகர்: இப்படி சினிமாவிற்காக மெனக்கெட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்தவர் முரளி. ஒரு படத்திற்காக நிறைய ஹீரோக்களிடம் கதை சொன்னேன் கதையை கேட்டுவிட்டு ஒகே சொன்னவர்கள், பின் கதைக்காக மொட்டை அடிக்க வேண்டும் என்று சொன்னதும், ஒரு படத்திற்காக மொட்டை அடித்துக்கொண்டு இரண்டு வருஷம் உங்கக்கூட இருக்க வேண்டுமா என்று கேட்பார்கள். என்ன பண்றதுனு தெரியாமல் முழிச்சிக்கிட்டு இருந்தேன் அப்போது தான் முரளியை சந்தித்து கதையை சொன்னேன். அவர் உடனே எப்போ மொட்டை அடிக்க வேண்டும் என்று கேட்டார். இப்போ ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன் அதை முடித்துவிட்டு பண்ணிவிடலாம் என்று சொன்னார். அந்த சந்திப்பு இப்போதும் என் மனதில் இருக்கு முரளி ஒரு உன்னதமான நடிகர் என்று சிங்கம்புலி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











