Vadivelu - யாரேனும் இறந்தால் தண்ணி போட்டு சந்தோஷப்படுவாரு.. அடுத்த வருஷம் இருக்கு.. வடிவேலுவை விளாசும் நடிகர்

சென்னை: வடிவேலு முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் இருந்தது. அவர் நடித்தால் போதும் அந்தப் படம் கண்டிப்பாக மினிமம் கியாரண்டியை எடுத்துவிடும் என்று திரைத்துறையில் பேச்சு ஓடியது. ஆனால் சில காரணங்களால் அவர் சினிமாவிலிருந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஒதுங்கி இருந்தார்.

ராஜ்கிரண் மூலம் சினிமாவுக்குள் வந்தவர் வடிவேலு. படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு 90களில் வளர்ந்துவரும் காமெடி நடிகராக இருந்தவர் 2000களில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். அவரது வெற்றிக்கும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால் அவர் மற்ற யாரையும் தாழ்த்தி பேசாமல், உருவ கேலி செய்யாமல் தன்னைத்தானே தாழ்த்தி காமெடி செய்துகொள்வார். அது மக்களிடையே வெகு பிரபலமடைந்தது.

Actor Singamuthu Slams Vadivelu at Latest Interview

பிரச்னை: பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என யாராக இருந்தாலும் அவர்கள் வடிவேலுவின் கால்ஷீட்டை எதிர்பார்க்கும் சூழல் நிலவியது. இவரும் ஒவ்வொரு காமெடியிலும் வெரைட்டி காட்டி சிரிப்பு பட்டாசை கொளுத்திப்போட்டார். சூழல் இப்படி இருக்க விஜயகாந்த் உறவினர் வீடும், வடிவேலுவின் அலுவலகமும் அருகருகே அமைந்திருந்தது. அப்போது விஜயகாந்த்தின் உறவினரை பார்க்க வந்தவர்கள் தங்களது காரை நிறுத்திவிட; வடிவேலுவுக்கு இடைஞ்சலாக இருந்ததாகவும் அதனால் அவர்களிடம் வாக்குவாதத்துக்கு சென்றதாகவும் ஒரு பேச்சு உண்டு.

அரசியல் மேடை: அந்த பிரச்னையால் வடிவேலு விஜயகாந்த் மீது கடும் கோபம் கொண்டார். பிறகு அதனை திமுகவின் மேடைகளில் காண்பிக்க ஆரம்பித்தார். ஆனால் விஜயகாந்த்தோ பதிலுக்கு எதுவுமே பேசவில்லை. இந்த சூழலில் வடிவேலு கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். பிறகு பத்து வருடங்கள் அமைதியாக இருந்த அவர்; அனைத்து பஞ்சாயத்துக்களையும் முடித்துக்கொண்டு மீண்டும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 படங்களில் நடித்த அவர் அடுத்ததாக ஃபகத் பாசிலுடன் நடிக்கிறார்.

சிங்கமுத்து பேட்டி: வடிவேலுவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் சிங்கமுத்து. அவர் வடிவேலுவின் காமெடிக்கு நிறைய ஐடியாக்களை கொடுத்தவர். ஆனால் அவருடனும் சில பிரச்னைகளால் வடிவேலு பேச்சை நிறுத்திக்கொண்டார். இதற்கிடையே விஜயகாந்த் உயிரிழப்புக்கு நேரில் வராத வடிவேலு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. விஜயகாந்த் மட்டுமின்றி அவருடன் பணியாற்றிய அல்வா வாசு, போண்டா மணி என யார் இறப்புக்கும் வடிவேலு செல்லவில்லை. அதேசமயம் கலைஞர் 100 விழாவுக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் சிங்கமுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் வடிவேலு பற்றி பேசுகையில், "வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் அவருக்கு கைகொடுத்தது. அவர் இவ்வளவு சொத்து சேர்த்ததற்கு காரணங்களில் நானும் ஒன்று. ஆனால் 7 கோடி ரூபாயை காணவில்லை என்று சொல்லிவிட்டார். எனக்கு எதுவென்றே தெரியாது. சொத்து வாங்கியதிலிருந்து அவருக்கு பாஸ்போர்ட் எடுத்ததுவரை உதவி செய்திருக்கிறேன். இவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறாரே நிம்மதியாக இருந்துவிடுவாரா. அவர் அப்பாவி மாதிரி நடித்ததால் மக்களுக்கு பிடித்துவிட்டது. இப்போது உண்மை முகம் தெரிந்துவிட்டது.

எதற்கும் வரவில்லை: ஒரு மனிதன் நல்ல குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும். அல்லது நல்ல புத்தகங்களை படித்திருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் நல்ல நண்பர்களை சம்பாதித்திருக்க வேண்டும். இந்த மூன்றுமே அவரிடம் இல்லை. விஜயகாந்த், மனோபாலா, மயில்சாமி என யாருடைய இறப்பிற்காவது அவர் வந்தாரா. அவர் வரமாட்டார் என்பது எனக்கு தெரியும். யாராவது இறந்துவிட்டால் ஊரில் இருக்கமாட்டார். செத்ததுக்கு தண்ணிய போட்டு சந்தோஷப்படுவாரு. அவருடைய ஜாதகப்படி சொல்றேன். அடுத்த வருஷம் இவருக்கு தெரியும். நான் சொல்றதை பொய்னுகூட சொல்லலாம். இந்த சமூகத்துக்கும் மக்களுக்கும் வில்லனே வடிவேலுதான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X