பி.இ. மாணவியுடன் ஓட்டம் பிடித்த திருமணமான நடிகர்

By Siva

சென்னை: பயபுள்ள படத்தின் ஹீரோ சிவா பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

பயபுள்ள படத்தின் மூலம் ஹீரோவானவர் சிவா. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செஞ்சியை சேர்ந்த அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.

அவர் சென்னை ராமாவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

 கல்லூரி மாணவி

கல்லூரி மாணவி

பக்கத்து வீட்டில் வசித்து வந்த பொறியியல் கல்லூரி மாணவியிடம் தான் பெரிய நடிகர் என்று கூறி பில்ட்அப் கொடுத்துள்ளார் சிவா. மேலும் தான் திரையுலக பிரபலங்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அந்த மாணவியிடம் காட்ட அவர் இம்பிரஸ் ஆகிவிட்டார்.

 மனைவி

மனைவி

சினிமா வாய்ப்புகள் சரியாக இல்லாததால் கிடைத்த சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவா பக்கத்து வீட்டு பெண்ணிடம் தான் மனைவியை பிரிந்து வாழ்வதாக பொய் சொல்லி அவரை தனது காதல் வலையில் விழ வைத்துள்ளார். சிவாவின் பேச்சை அந்த மாணவி அப்படியே நம்பி அவரை காதலிக்கத் துவங்கினார்.

 ஓட்டம்

ஓட்டம்

தங்களின் மகள் சிவாவுடன் நெருங்கிப் பழகியதை பார்த்த அவரின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். ஆனால் அந்த மாணவி பெற்றோர் பேச்சை கேட்கவில்லை. இந்நிலையில் சிவா அந்த மாணவியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துவிட்டார். இது குறித்த அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 விசாரணை

விசாரணை

போலீஸ் விசாரணையில் சிவா தனது மனைவியை பிரியவில்லை என்பது தெரிய வந்துள்ளது. சிவாவையும், மாணவியையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருமணமான நடிகர் கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்த தகவல் அறிந்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X