கடனில் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. கை கொடுக்கும் சன் பிக்சர்ஸ்.. 5 படங்கள்.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து 5 படங்களில் கமிட்டாகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன், நடிகர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ளார்.

பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது டாக்டர், அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

டான் பட அறிவிப்பு

டான் பட அறிவிப்பு

இதில் டாக்டர் படம் மார்ச் மாதமே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக சட்டசபை தேர்தல், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லைகா நிறுவனம்

லைகா நிறுவனம்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

5 படங்கள்

5 படங்கள்

இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் டிவி பிரபலங்கள் ஷிவாங்கி, புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

75 கோடி சம்பளம்

75 கோடி சம்பளம்

அதாவது, அடுத்த 2 ஆண்டுகளில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக 5 படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும், இதற்காக மொத்தமாய் 75 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

ஏற்கனவே கடனில் சிக்கித் தவித்து வரும் சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸின் இந்த டீலிங்கிற்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X