புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற செல்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்!
சென்னை: மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை மூலம் வெள்ளித் திரைக்கு என்ட்ரி கொடுத்து இன்று வெற்றி நடிகராகவும் வலம் வருகிறார்.
அண்மையில் இவரது நடிப்பில் வெளியான டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

புனித் குடும்பத்தினருடன் சந்திப்பு
தற்போது அயலான், டான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகவுள்ளார். அந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளார்.

சிகிச்சை பலனின்றி மரணம்
பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக் கிழமை திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கடுமையான கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

கண்டீரவா மைதானம்
அவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சிவகார்த்திகேயன் ஆறுதல்
நேற்றுக்காலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சிவ ராஜ்குமாருடன் சந்திப்பு
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஸ்வினி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். அவரது அண்ணன் சிவ ராஜ்குமாரும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சிவ ராஜ்குமாரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











