ஆஹா.. நீங்க கேக் வெட்ட.. உங்க மகன் கை தட்ட.. அருமைணே.. நெல்சனுக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன நடிகர்!
சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அசத்தலாய் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
தொலைக்காட்சி சேனலில் ஸ்க்ரிப்ட் ரைட்டராக கேரியரை தொடங்கியவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
தொடர்ந்து 2010ஆம் ஆண்டு சிம்பு, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வேட்டை மன்னன் படத்தை இயக்கினார். ஆனால் சில காரணங்கள் இந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

கோலமாவு கோகிலா
இதனை தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். இந்தப் படம் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூலையும் குவித்தது.

டாக்டர் படம்..
அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் தேர்தல் மற்றும் கொரோனா பரவல், லாக்டவுன் காரணமாக தள்ளி போனது.

தளபதி 65
தற்போது நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜய்யை இயக்குகிறார். இன்னும் பெயர் அறிவிக்கப்படாத நிலையில் தளபதி 65 எனக் குறிப்பிடப்படும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பிரபலங்கள் வாழ்த்து
இந்நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கேக் வெட்டும் போட்டோ
அந்த வகையில் அவருடன் டாக்டர் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ள நடிகர் சிவகார்த்திகேயனும் நெல்சன் திலீப்குமாருக்கு அசத்தலாய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வீட்டில் கேக் வெட்டும் போட்டோவை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் .

உங்க மகன் கை தட்ட..
நெல்சன் கேக்கை வெட்டும்போது அவரது மகன் கைகளை தட்டுகிறார். இந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ள சிவகார்த்திகேயன், பிறந்தநாள் வாழ்த்துகள் நெல்சன் அண்ணா.. ஆஹா.. நீங்க கேக் வெட்ட உங்க மகன் கை தட்ட அருமை ணே.. இதேபோல பல வருடங்கள் ஹேப்பியா இருந்து பல பிளாக்பஸ்டர்ஸ் கொடுக்கணும்.. இவ்வாறு சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











