நடிகர் சிவாஜி வாரிசுகளிடையே சொத்து தகராறு.. விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்!

சென்னை: சாந்தி தியேட்டர் பங்குகளில் தங்களுக்கும் உரிமை வழங்க கோரி நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

நடிகர் திலகம் என மக்களால் போற்றப்பட்ட நடிகர் சிவாஜியின் வாரிசுகளிடையே இதுவரை இல்லாத அளவுக்கு திடீரென இப்படியொரு மோதல் ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சாந்தி தியேட்டர் என மகள் சாந்தியின் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பங்குகளில் தனக்கு உரிமை இல்லையா என மகள் சாந்தி மற்றும் அவரது சகோதரி ராஜ்வி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சிவாஜி மகள்கள் வழக்கு

சிவாஜி மகள்கள் வழக்கு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், தந்தையின் சொத்துக்களில் தங்களுக்கு உரிமை உள்ளதாக கூறி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சிவாஜி குடும்பத்திடம்

சிவாஜி குடும்பத்திடம்

இந்நிலையில் சாந்தி தியேட்டர் நிறுவனத்துக்கு சொந்தமான 13,500 பங்குகளில், 600க்கும் மேற்பட்ட பங்குகள், சிவாஜி கணேசன் குடும்பத்தினர் வசம் உள்ளது. இந்நிலையில், சாந்தி தியேட்டரை வாங்கிய அக்‌ஷயா ஹோம்ஸ் நிறுவனம், அங்கு வணிக வளாகமும், அடுக்குமாடி குடியிருப்பும் கட்டியுள்ளது.
சாந்தி தியேட்டர் பங்குகளில் தங்களுக்கும் உரிமை உள்ளதாக கூறி, நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

குடும்ப பிரச்சனை

குடும்ப பிரச்சனை

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010ம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமானம் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக தனியார் கட்டுமான நிறுவனமான அக்‌ஷயா ஹோம்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

Recommended Video

Kovai Sarala-வை Kamal இப்படி பாராட்டியிருக்காரே! Vikram OTD Release *Kollywood | Filmibeat Tamil
விசாரணை தள்ளி வைப்பு

விசாரணை தள்ளி வைப்பு

நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் தரப்பில், அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்களான சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில், வழக்கில் கூடுத்ல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X