அப்ப திருவிளையாடல்... இப்ப கர்ணனா? தனுஷ் பட டைட்டலுக்கு சிவாஜி ரசிகர்கள் திடீர் எதிர்ப்பு

By

சென்னை: தனுஷ் படத்துக்கு வைக்கப்பட்டுள்ள, கர்ணன் படத் தலைப்பு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சூப்பர் ஹிட்டான 'அசுரன்' படத்தை தனுஷ் நடித்துள்ள பாட்டாஸ் படம் 16 ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.

ரஜிஷா விஜயன்

ரஜிஷா விஜயன்

அடுத்து, பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜின் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.

நெல்லை வழக்கு

நெல்லை வழக்கு

இந்தப் படத்திலும் தனுஷ் நெல்லை வழக்கில் பேசி நடிக்க இருக்கிறார். திருநெல்வேலி அருகே பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு, சிவாஜி பட டைட்டிலான 'கர்ணன்' பட டைட்டிலை வைத்துள்ளனர்.

மாஞ்சோலை

மாஞ்சோலை

மாஞ்சோலை தொழிலாளர்கள் பற்றிய கதை என்று சொல்லப்படும் இதன் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லையில் தொடங்கியது. இதில் உள்ளூர் இளைஞர்களையும் நடிக்க வைக்க முடிவு செய்த இயக்குனர் ஆடிஷன் நடத்தியுள்ளார். இதில் சில இளைஞர்கள் தேர்வாகியுள்ளனர்.

தலைப்புக்கு எதிர்ப்பு

தலைப்புக்கு எதிர்ப்பு

இதற்கிடையே, கர்ணன் படத் தலைப்புக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுகுறித்து நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையில் தலைவர் கே.சந்திரசேகரன், தயாரிப்பாளர் தாணுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கூறியிருப்பதாவது:

சரியல்ல

சரியல்ல

தங்கள் தயாரிப்பில் 'கர்ணன்' என்ற பெயரில் திரைப்படம் உருவாவதாக படித்தேன். இது வருத்தம் அளிக்கிறது. நடிகர் திலகத்தின் மகாபாரதக் கர்ணன் திரைப்படப் பெயரை மீண்டும் பயன்படுத்துவது சரியல்ல. பெயரில் ஏதாவது இணைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இது நடிகர் திலகம் ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கை என்று கூறியுள்ளார்.

திருவிளையாடல்

திருவிளையாடல்

ஏற்கனவே தனுஷ் நடித்த திருவிளையாடல் படத்துக்கும் சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து திருவிளையாடல் ஆரம்பம் என்று படத்தை வெளியிட்டனர். இந்நிலையில் இந்த பட டைட்டிலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X