twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘எனி பப்ளிசிட்டி.. குட் பப்ளிசிட்டி'- ‘ஐ’ ஷங்கரைப் பாராட்டும் தயாரிப்பாளர் ராம்குமார்

    |

    சென்னை: அறுவடைநாள் படத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு ஷங்கரின் ஐ படத்தில் நடித்துள்ளார் சிவாஜியின் மூத்த மகனும் தயாரிப்பாளருமான ராம்குமார்.

    ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகின்ற படம் ‘ஐ'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

    உலகம் முழுக்க 15 மொழிகள், 1500 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப் பட்டிருக்கும் இந்தப் படத்தில் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராம்குமார் சிவாஜி கணேசன்.

    ஐ பட அனுபவம் குறித்து தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுமையான அனுபவம்...

    புதுமையான அனுபவம்...

    நான் ஒரு தயாரிப்பாளர், நடிகன் அல்ல. நீண்ட காலத்துக்குப் பின் 'ஐ' படத்தில் நடித்தது புதுமையான அனுபவமாக இருந்தது.

    ஷங்கரின் வேண்டுகோள்...

    ஷங்கரின் வேண்டுகோள்...

    பிரம்மாண்ட படங்களை எடுக்கும் இயக்குநர் ஷங்கர் கேட்டுக் கொண்டாரே என்பதற்காகத்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

    அறுவடைநாள்...

    அறுவடைநாள்...

    கடந்த 1986-ம் ஆண்டில் சிவாஜி புரடக்ஷன் தயாரித்து பிரபு நடித்த 'அறுவடை நாள்' படத்தில்தான் கடைசியாக நடித்தது. கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் 'பிசினஸ்மேன்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

    குட் பப்ளிசிட்டி....

    குட் பப்ளிசிட்டி....

    'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்துகொள்வதாக கேள்விப்பட்டேன். ஒரு தயாரிப்பாளராக படத்துக்கு செய்யும் 'எனி பப்ளிசிட்டி.. குட் பப்ளிசிட்டி' என்பதுதான் என் கருத்து. அந்த வகையில் அவர் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கடினமான வேலை...

    கடினமான வேலை...

    படங்களைத் தயாரித்து முதலாளியாக இருப்பவன் நான். நடிப்பது ரொம்பவே கடினமான வேலை. மீண்டும் ஒரு படத்தில் நடிப்பேன் என்றெல்லாம் நினைத்து பார்க்கவே இல்லை.

    பெரிய படம்...

    பெரிய படம்...

    ஒரு பெரிய படம். அதில் நம்மோட பங்களிப்பும், அனுபவமும் சிறிய அளவில் இருக்கட்டுமே என்று சம்மதித்தேன். அவ்வளவுதான்.

    நிறைய விஷயங்கள் உள்ளது...

    நிறைய விஷயங்கள் உள்ளது...

    இனி தொடர்ந்து நடிப்பதை பற்றியெல்லாம் நினைக்கவே இல்லை. அதுக்கு இயக்குநர், கதை என்று நிறைய விஷயங்கள் இருக்கிறதே'' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The veteran actor Sivaji's elder son Ramkumar played a businessman character in the Shankar's movie 'Ai'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X