Sivakarthikeyan: அது ரொம்ப கஷ்டம்.. அதுமட்டும் என்னால முடியாது.. அலறும் சிவகார்த்திகேயன்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளியையொட்டி அவரது அமரன் படம் வெளியாகி மிகச் சிறப்பான விமர்சனங்களை, வரவேற்பை மற்றும் வசூலை குவித்து வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் இந்த படம் ஓடிடியிலும் வெளியாகவுள்ளது.
அமரன் படத்திற்கான பிரமோஷனில் அடுத்தடுத்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் இயக்கம் குறித்தும் பேசியுள்ளார், தான் முன்னதாக நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியது குறித்தும் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். இயக்குநராவாரா என்ற கேள்விக்கும் சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வரும் நிலையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமரன் படம் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த நிலையில் படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்தார். படத்தில் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை சிறப்பான வகையில் கொடுத்திருந்தார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்திய நிலையில் அவருக்கு இணையாக அவரது மனைவி கேரக்டரில் சாய் பல்லவியும் அனைத்து தரப்பினரையும் இம்ப்ரஸ் செய்யும் வகையில் நடித்திருந்தார்.
இயக்கம் குறித்து சிவகார்த்திகேயன்: ராணுவ கதைக்களத்தை மையமாகக் கொண்டு இந்த படம் வெளியான நிலையிலும் முகுந்த் மற்றும் அவரது மனைவி இந்துவின் காதல் படத்தில் மிகச் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. இவர்களின் அழுத்தமான காதல் மற்றும் திருமணம் சிறப்பான காட்சிகளுடன் விவரிக்கப்பட்டுள்ள நிலையில் முகுந்தின் மரணம் அவரது குடும்பத்தினருக்கு எத்தகைய பேரிடராக அமைந்திருக்கும் என்பதை ரசிகர்கள் தாங்களாகவே உணரும் வகையில் படத்தின் அடுத்தடுத்த காட்சி அமைப்புகள் காணப்பட்டன. இந்த படம் குறித்து அடுத்தடுத்த பேட்டிகளை சிவகார்த்திகேயன் கொடுத்து வந்த நிலையில் தற்போது அவர் இயக்கம் குறித்தும் பேசியுள்ளார்.
உதவி இயக்குநராக சிவகார்த்திகேயன்: தான் முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதாகவும் சினிமாவில் நடிப்பதை காட்டிலும் இயக்கம் மிகவும் கடினமான விஷயம் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இயக்குநராக செயல் படுவதற்கு அதிகமான பொறுமை அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதே போல ஸ்கிரிப்ட் ரைட்டிங்கும் மிகவும் கடினமான விஷயம் என்றும் அதற்கும் பொறுமை மிகவும் அவசியம் என்றும் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். தன்னிடம் அதிகமான ஐடியாக்கள் உள்ளதாகவும் இயக்குநர்கள் தன்னை அணுகினால் அதைத்தான் கூற தயாராக இருப்பதாகவும் அந்த கதைக்களத்தை அவர்களே உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் சிவகார்த்திகேயன் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இணைந்து படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் இணையவுள்ளார். இதன் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அறிவிப்பு மற்றும் பூஜை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடாந்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











