“தலைவர் 169“ அடிதூள் அப்படிபோகுதா கதை.. சிவகார்த்திகேயனுக்கு இப்படிப்பட்ட ரோலா?
சென்னை : ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 திரைப்படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில், இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
'தலைவர் 169' படத்தின் ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்கா பிளான் தயாராக உள்ளதாம். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஷூட்டிங்கை படுவேகமாக முடித்து விட்டு அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

அண்ணாத்த
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தலைவர் 169
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. ரஜினி கோர்ட் சூட் அணிந்து கெத்தாக போஸ் கொடுத்த ப்ரோமோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.

ரஜினியின் மகனாக
தலைவர் 169 திரைப்படம் குறித்த தகவல் அப்பேட்டுகள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் கசிந்து வருகின்றன. இந்நிலையில் தலைவர் 169 திரைப்படத்தில் ரஜினியின் மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியுடன் சின்ன ரோலில் நடிக்க ஆசைப்பட்ட சிவகார்த்திகேயனுக்கு அவரது மகனாக நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் நெல்சன். இதனால்,சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு
இத்திரைப்படத்தில் நகைச்சுவைக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், இப்படத்தில் வைகை புயல் வடிவேலு நடிக்க உள்ளதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











