சிங்கம், புலியை வளர்க்கும் சிவகார்த்திகேயன்.. பாராட்டிய தமிழ்நாடு அரசு.. SK வேற லெவல்தான் போங்க!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக மாறிவிட்டார். தனது 25வது படம் வெளியாவதற்கு முன்னரே தமிழ் சினிமாவில் கலெக்‌ஷன் மன்னனாக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன். தற்போது இவரது நடிப்பில் மூன்று படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் சிவகார்த்திகேயனை தமிழ்நாடு அரசு பாராட்டியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன இந்த படம் தியேட்டரில் மட்டும் உலக அளவில் ரூபாய் 350 கோடிகளை வசூல் செய்தது. இதனால் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், கமல் ஆகியோருக்குப் பின்னர் ரூபாய் 350 கோடிகள் வசூல் செய்த நடிகராக மாறினார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் மதராஸி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

Actor Sivakarthikeyan Adopted a lion named Sheriyar and a tiger named Yuga from the Vandalur Zoo for 3 months

பராசக்தி: அதேபோல் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படத்தின் டைட்டிலுடன் தற்போது ' அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது, இதனால் ரசிகர்கள் மேலும் குஷியாகி உள்ளார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், திராவிட சித்தாந்த அரசியல் பேசும் கல்லூரி மாணவனாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு என்பது தமிழ்நாடு, இலங்கை என மிகவும் பரபப்பாக நடைபெற்றது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 25வது படம், அதேபோல் ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100 வது படம் ஆகும்.

பிஸி: இந்த படம் இல்லாமல், இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் பக்கா கமட்ஷியலான படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில், ரசிகர்களுக்கு அந்த படம் குறித்து பல கேள்விகள் மனதில் உள்ளன. அதாவது, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படம் சிவகார்த்திகேயனின் 24 வது படம் அப்படி இருக்கும்போது, அந்த படத்தை எப்போது எடுத்து, எப்போது ரிலீஸ் செய்வார்கள் என்ற கேள்வியை அனைவரும் முன் வைத்து வருகிறார்கள்.

Actor Sivakarthikeyan Adopted a lion named Sheriyar and a tiger named Yuga from the Vandalur Zoo for 3 months

சிங்கம் - புலி: இந்த அளவுக்கு பிஸியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன், தற்போது அட்டகாசமான வேலை ஒன்றைச் செய்துள்ளார். அதாவது தலைநகர் சென்னை மற்றும் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஸ்ரேயர் என்ற சிங்கத்தையும், யுகா என்ற புலியையும் தத்தெடுத்து வளர்க்க உள்ளார். அதாவது அடுத்த மூன்று மாதங்களுக்கு ஸ்ரேயர் மற்றும் யுகாவின் பராமரிப்புச் செலவு, உணவுச் செலவு ஆகியவற்றை சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்காக அவரை தமிழ்நாடு அரசு பாராட்டியுள்ளது. இது குறித்து தெரிந்தவர்களும் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகிறார்கள். இவர் ஏற்கனவே பலமுறை இது போல தத்தெடுத்து வளர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X