பிறந்தநாள் கொண்டாட்டம்... குடும்பத்துடன் திருச்செந்தூர் பறந்த சிவகார்த்திகேயன்... கோயிலில் தரிசனம்

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் முதல் பாடலும் செம்ம மாஸாக வெளியானது.

அதனைத் தொடர்ந்து மாவீரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவும் ட்விட்டரில் ட்ரெண்டானது.

இந்நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

 பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

கோலிவுட்டின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். சிவாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தாறுமாறாக வெளியானது. பரத் ஷங்கர் இசையில் அனிருத் பாடியிருந்த இந்தப் பாடல் ரசிகர்களிடம் ட்ரெண்டானது. அதுமட்டும் இல்லாமல் மாவீரன் செட்டில் சிவகார்த்திகேயன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவும் வைரலானது.

 திருச்செந்தூர் பறந்த சிவகார்த்திகேயன்

திருச்செந்தூர் பறந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்ந்து டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் சைலண்டாக தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் பறந்தார். அதன்பின்னர் அங்குள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற முருகனின் இரண்டாம் அறுபடை வீடான முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தனது மனைவி ஆர்த்தி, குழந்தைகள் ஆகியோருடன் கோயில் சென்ற சிவகார்த்திகேயனை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

 எஸ்கேவின் சிறப்பு தரிசனம்

எஸ்கேவின் சிறப்பு தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள மூலவர் சன்னதி, சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி, தட்சிணாமூர்த்தி, சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சாமிகளையும் தரிசனம் செய்தார் சிவகார்த்திகேயன். திடீரென சிவகார்த்திகேயனை கோயிலில் கண்ட பக்தர்களும் அவரது ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர். சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துகொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின.

 விரைவில் மாவீரன் அப்டேட்

விரைவில் மாவீரன் அப்டேட்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் நடிக்கும் மாவீரன் திரைப்படம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அயலான் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், மாவீரன் ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X