கமலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.. விக்ரம் படம் பற்றி இந்த நடிகர் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

சென்னை : நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் விக்ரம்.

Recommended Video

Vikram Public Review | Kamal Haasan | VijaySethupathi | Lokesh Kanagaraj | #vikramfdfs

லோகேஷ் கனகராஜின் 100 சதவிகித படமாக இந்தப் படம் வெளியாகியுள்ளது. முன்னதாக ஒரு பேட்டியிலும் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இந்தப் படத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கமலின் விக்ரம் படம்

கமலின் விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது விக்ரம் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள கமலின் படம் விக்ரம் என்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. மேலும் மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்த லோகேஷ் இயக்கத்தில் படம் உருவானதும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்தது.

மிரட்டலான நடிப்பு

மிரட்டலான நடிப்பு

இந்நிலையில் தற்போது அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளது. கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களும் மிரட்டியுள்ளனர். ரோலெக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ள நிலையில், அந்த கேரக்டரும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளது.

லோகேஷின் 100 சதவிகித படம்

லோகேஷின் 100 சதவிகித படம்

தன்னுடைய 100 சதவிகித படமாக விக்ரம் படத்தை இயக்கியுள்ளதாக முன்னதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். முன்னதாக அவர் இயக்கத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படத்தில் சில சமரசங்களை செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் திரைக்கதை மிரட்டலாக அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் வாழ்த்து

சிவகார்த்திகேயன் வாழ்த்து

ஒரு சில குறைகளை விமர்சகர்கள் கூறினாலும் படம் ஒட்டுமொத்தமாக அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் படம் பெரிய அளவில் வெற்றி பெற படக்குழுவினருக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்களை குறிப்பிட்டு அவர் வாழ்த்தியுள்ளார்.

சிறப்பாக அமையும்

சிறப்பாக அமையும்

மேலும் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் அவருக்கு மிகச்சிறப்பான படமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முக்கியமான படங்கள் வெளியாகும்போது அந்தப் படங்களுக்கு வாழ்த்துக்களை கூறும் பழக்கத்தை சிவகார்த்திகேயன் தொடர்ந்து செய்து வருவது பாராட்டுக்குரியது.

சாந்தனு, ஹரீஷ் கல்யாண் வாழ்த்து

சாந்தனு, ஹரீஷ் கல்யாண் வாழ்த்து

இதனிடையே நடிகர் சாந்தனுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலை மான்ஸ்டர் என்று குறிப்பிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். லோகேஷின் ரைட்டப்பையும் பாராட்டியுள்ளார். இதேபோல நடிகர் ஹரீஷ் கல்யாணும் விக்ரம் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியும் வாழ்த்து

ஜெயம் ரவியும் வாழ்த்து

நடிகர் ஜெயம் ரவியும் கமல்ஹாசன், விஜய் சேதுபதி என படத்தின் நடிகர்களை டேக் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களும், விமர்சகர்களும் படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக படத்தின் முதல் நாள் முதல் ஷோவிற்கு வந்திருந்த லோகேஷ் உள்ளிட்டவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X