பிள்ளையார்பட்டிக்கு போன சிவகார்த்திகேயன்.. கூட யாரெல்லாம் போயிருக்காங்கன்னு பாருங்க!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான அமரன் படம் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்திருந்தார். பயோபிக்காக உருவாகியிருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மனைவியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இவர்களது காம்பினேஷன் பெஸ்ட்டாக அமைந்து படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்திருந்தது.
அமரன் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இணைந்து வருகிறார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார். இதனிடையே, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயனின் அமரன் படம் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மதராஸி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் வட இந்தியர்கள் பார்வையில் தென்னிந்தியர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதாக கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதனால் மதராஸி என்ற படத்தின் டைட்டில் பொருத்தமாக அமைந்துள்ளதாகவும் முருகதாஸ் குறிப்பிட்டிருந்தார்.
பிள்ளையார்பட்டி சென்ற சிவகார்த்திகேயன்: படத்தில் சிவகார்த்திகேயனின் கெட்டப் மிகவும் அதிரடியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அமரன் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கிய நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது ஷூட்டிங்கை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளார். இன்னும் சில காட்சிகள் படத்தில் மீதம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் இன்றைய தினம் பிள்ளையார்பட்டிக்கு சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் அதர்வாவும் அவருடன் சென்றுள்ளனர்.
பீரியட் படம்: இதன் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் இயல்பான லுக்கில் சிவகார்த்திகேயன் காணப்படுகிறார். அதர்வாவும்ம் அவரும் சிரித்தபடி இருக்க இயக்குநர் சுதா கொங்கரா மாஸ்க் அணிந்தபடி முழுவதுமாக தன்னுடைய முகத்தை மறைத்தவாறு காணப்படுகிறார். இந்தப் படத்தின் சூட்டிங்கின் இடைவெளியில் பிள்ளையார்பட்டிக்கு இவர்கள் விசிட் அடித்துள்ளனர். பீரியட் படமாக இந்தி திணிப்பு எதிர்ப்பை கதைக்களமாக கொண்டு பராசக்தி படம் உருவாகி வருகிறது. படத்தில் ரவி மோகன் வில்லனாகியுள்ளார். படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் சூட்டிங் நிறைவு: இதையடுத்து வரும் ஜூன் மாதத்திற்குள் இந்த படத்தின் ஷூட்டிங்கை முற்றிலுமாக நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகிறது. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படம் உருவாகிவருகிறது. காமெடி ஹீரோவாக இருந்து தற்போது அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். அவரது கேரியர் பெஸ்ட்டாக அமரன் படம் அமைந்த நிலையில் அடுத்தடுத்து ஆக்ஷன் கதைக்களங்களில் மதராஸி மற்றும் பராசக்தி படங்கள் உருவாகி வருகின்றன. இந்த படங்களும் அவரது அடுத்த கேரியர் பெஸ்ட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











