SK22: மீண்டும் போலீஸ் அதிகாரியாக மிரட்ட காத்திருக்கும் சிவகார்த்திகேயன்.. SK22 ஸ்கிரிப்ட் ரெடி!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது மாவீரன் படம் வெளியானது.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து தனது எஸ்கே 22 படத்திற்காக இயக்குநர் ஏஆர் முருகதாசுடன் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன்.

Actor Sivakarthikeyan -AR Murugados combination SK22 movie update released

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப்பட இயக்குநர்களுடன் இணைந்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் அவரது டாக்டர், டான் படங்கள் சிறப்பாக அமைந்த நிலையில், கடந்த ஆண்டில் வெளியான பிரின்ஸ் படம் சொதப்பியது. ஆனாலும் சற்றும் மனம் தளராமல் தனது அடுத்த ப்ராஜெக்ட்டில் சிறப்பாக பணியாற்றினார் சிவகார்த்திகேயன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான அவரது மாவீரன் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிவரை இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்கே 21 படத்தின் சூட்டிங்கை காஷ்மீரில் முடிக்கும் படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங்கை சென்னையில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார். ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துவரும் எஸ்கே21 படத்தில் சிவகார்த்திகேயனின் ஹேர்ஸ்டைல் உள்ளிட்டவை சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில் டைட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக எஸ்கே22 படத்தில் பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாசுடன் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். மிருணாள் தாக்கூர் ஜோடியாக நடிக்கவுள்ளார். எஸ்கே21 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்தவுடன் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஷ்ன் என்டர்டெயினராக உருவாகவுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக காக்கி சட்டை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். அந்தப் படம் அவரது கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது. இந்நிலையில், முன்னதாக விஜய் உள்ளிட்டவர்களை வைத்து சிறப்பான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்துள்ளது கோலிவுட்டில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வரும் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷனாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அதிகமான சிஜி வேலைகள் செய்யப்பட்டுள்ளன. அதனாலேயே படத்தின் ரிலீஸ் தாமதமானது. இந்நிலையில் இந்தப் படம் சிவகார்த்திகேயன் கேரியரில் மிகச்சிறந்த படமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X