Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுடன் ஏஆர் முருகதாஸ் இணையும் படம்.. நாயகி யார் தெரியுமா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது எஸ்கே21 படத்தின் சூட்டிங்கில் பிசியாகியுள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டிலேயே துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயன் -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இணையும் நாயகி: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சாய் பல்லவி ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் புகைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. விரைவில் இந்தப் படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்ததாக வரும் தீபாவளியையொட்டி சிவகார்த்திகேயனின் அயலான் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஏலியனை மையமாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்களும் விரைவில் வெளியாகவுள்ளன. படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் எந்த இயக்குநருடன் இணையவுள்ளார் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக தகவல்கள் வெளியானபடி, தன்னுடைய அடுத்தப்படத்தில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் எஸ்கே21 படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகியுள்ளார். இதனிடையே படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. மிருணாள் தாக்கூர் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவுள்ளதாகவும் இதையொட்டி அவர் சமீபத்தில் படத்தின் டெஸ்ட் ஷூட்டில் இணைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் மிருணாள் சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளது ரசிகர்களை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











