திரைத்துறையில் 11 ஆண்டுகளை கடந்த சிவகார்த்திகேயன்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் மெரினா படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக தன்னுடைய பயணத்தை துவங்கிய சிவகார்த்திகேயன் தொடர்ந்து விஜய் டிவியின் ஆங்கராக மாறினார்.

தொடர்ந்து 3 உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்து பிறகு ஹீரோவாகவும், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என தன்னை முன்னேற்றிக் கொண்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக தன்னுடைய கேரியரை துவங்கியவர். தொடர்ந்து விஜய் டிவியின் ஆங்கராக மாறி ரசிகர்களை கவர்ந்தவர். இதையடுத்து 3 உள்ளிட்ட படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் கடந்த 2012ம் ஆண்டில் பிப்ரவரி 3ம் தேதி ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தினார்.

ஹீரோவாக என்ட்ரி

ஹீரோவாக என்ட்ரி

இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஓவியா இந்தப் படத்தில் இணைந்திருந்தார். இந்தப் படம் விமர்சனரீதியாக நல்ல பெயரை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு மிகச்சிறந்த பெயரை பெற்றுத் தந்தப் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

ஆடி க்யூ7 காரை பெற்ற சிவகார்த்திகேயன்

ஆடி க்யூ7 காரை பெற்ற சிவகார்த்திகேயன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மதன் சிவகார்த்திகேயனுக்கு ஆடி க்யூ7 காரை பரிசாக கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றிக்கு சிவாவின் அலட்சியமான நடிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. தொடர்ந்து ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் சிவாவிற்கு சிறப்பாக அமைந்தது.

பன்முகத் திறமை கொண்ட சிவகார்த்தி

பன்முகத் திறமை கொண்ட சிவகார்த்தி

இந்தப் படங்கள் அவருக்கு ஏறுமுகமாக அமைந்த நிலையில், தன்னை கமர்ஷியல் ஹீரோவாகவும் தயாரிப்பாளராகவும் நிலை நிறுத்திக் கொண்டார். பாடகர், பாடலாசிரியராகவும் தன்னை ரசிகர்களிடையே சிறப்பாக வெளிப்படுத்தினார். தன்னுடைய தந்தையை போலவே போலீஸ் அதிகாரியாக வேண்டும என்று விரும்பிய சிவகார்த்திகேயனின் பயணம், அவரது மறைவையடுத்து மாறியது.

அஜித் படத்தில் சிவகார்த்திகேயன்

அஜித் படத்தில் சிவகார்த்திகேயன்

தொடர்ந்து தன்னை சினிமாவில் சிறப்பாக வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன், ஆரம்பத்தில் அட்லி இயக்கத்தில் வெளியான முகப்புத்தகம், ஐடின்டிடி, குறள் 786, 360 டிகிரி உள்ளிட்ட குறும்படங்களில் நடித்துள்ளார். அஜித்தின் ஏகன் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஆனால் படத்தின் நீளம் காரணமாக அவரது போர்ஷன் கட் செய்யப்பட்டது.

நெல்சனுடன் சிவகார்த்திகேயன்

நெல்சனுடன் சிவகார்த்திகேயன்

நெல்சன் இயக்குநராக அறிமுகமான சிம்புவின் வேட்டை மன்னன் படத்தில் துணை இயக்குநராக சிவகார்த்திகேயன் பணியாற்றினார். தொடர்ந்து இவர்களது காம்பினேஷன் டாக்டர் படத்திலும் சிறப்பாக அமைந்தது. அந்தப் படம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

திரைத்துறையில் 11 ஆண்டுகள்

திரைத்துறையில் 11 ஆண்டுகள்

இதனிடையே இன்றைய தினம் சிவகார்த்திகேயனின் மெரினா படம் ரிலீசாகி இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து #11YearsOfPrinceSKism என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இயக்குநர் மடோன் அஸ்வின், தர்ஷன், ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் மற்றும் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மாவீரன் படத்தின் சிறப்பு போஸ்டர்

மாவீரன் படத்தின் சிறப்பு போஸ்டர்

இதனிடையே சிவகார்த்திகேயனின் இந்த 11 ஆண்டுகள் கொண்டாட்டத்தை குறிப்பிடும் வகையில் மாவீரன் படத்தின் சிறப்பு போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரில் அவரது 11 ஆண்டுகால திரைப்பயணம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவீரனின் 11 ஆண்டுகால சிறப்பான பயணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X